புஷ்பாபு படத்திற்குப் பிறகு ராஷ்மிகா மந்தனாவின் ரேட்டிங் எங்கோ சென்று விட்டது. அவருக்கு தமிழ் , பாலிவுட் என வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் விஜயின் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அமிதாபச்சன் நடிப்பில் வெளியான குட் பை படத்தில் முக்கிய ரோலில் தோன்றியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. விகாஸ் பால் என்பவர் இயக்கியிருந்த இந்த படத்தை குட் கோ பாலாஜி மோஷன் பிக்சர்ஸ், சரஸ்வதி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்டவை இணைந்து தயாரித்திருந்தன. இதில் அமிதாப் பச்சன், நீனா குப்தா , ராஷ்மிகா மந்தனா, சுனில் குரோவர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களின் சம்பளம் குறித்து இங்கு பார்க்கலாம்...