தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் அறிமுகமான 'பிரேமம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தன்னுடைய எளிமையான அழகால் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்த்திழுத்தார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிகர் சூர்யா தயாரிப்பில் நடித்திருந்த 'கார்கி' திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி அடையவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக பல்வேறு பாராட்டுக்களை குவித்தது. சாய் பல்லவியின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
நடிகை சாய் பல்லவி ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஜார்ஜியாவில் தன்னுடைய மருத்துவ படிப்பை படித்த இவருக்கு திடீர் என 'பிரேமம்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே... நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது தன்னுடைய மருத்துவபடிப்பு யாருக்கும் பயன் இல்லாமல் போய் விட கூடாது என, தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறாராம்.