சன்னி லியோனுக்கு என்ன ஒரு தங்கமான மனசு..! ‘தெருநாய்களை காக்க வந்த தேவதை’ என புகழும் ரசிகர்கள்

Published : Nov 29, 2022, 02:27 PM IST

சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வைபரும் சேர்ந்து தெருநாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

PREV
14
சன்னி லியோனுக்கு என்ன ஒரு தங்கமான மனசு..! ‘தெருநாய்களை காக்க வந்த தேவதை’ என புகழும் ரசிகர்கள்

கனடாவைச் சேர்ந்தவர் சன்னி லியோன். இவர் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய பின்னர் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

24

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் இவர் நடிப்பில் தற்போது ஓ மை கோஸ்ட் என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சன்னி லியோன் தான் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... லூசு மாதிரி கதைக்காதீங்கனு சொன்ன ஜனனியை வெளுத்துவாங்கிய அசீம்... பரபரக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

34

இவ்வாறு நடிப்பில் பிசியாக இருக்கும் சன்னி லியோன் பீட்டா என்கிற விலங்குகள் நல அமைப்புடன் சேர்ந்து விலங்குகளை காப்பதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வைபரும் சேர்ந்து தெருநாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

44

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தெருநாய்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் தினசரி நிகழ்ந்து வருகிறது. அத்தகைய நாய்களை காப்பாற்றுவதற்காகவே இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருக்கிறோம். இதன்மூலம் தெரு நாய்களுக்கு உடனுக்குடன் மருத்துவ உதவி கிடைக்கும் என நம்புகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும்டும்டும்.. மாப்பிள்ளை யார்?

click me!

Recommended Stories