தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்தி சுரேஷ், ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய் உடன் பைரவா, தனுஷ் உடன் தொடரி, விக்ரம் உடன் சாமி 2, ரஜினியுடன் அண்ணாத்த என முன்னணி நடிகர்களுடன் நடித்து பாப்புலர் ஆனார் கீர்த்தி சுரேஷ்.