கோவா சர்வதேச பட விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்த நடுவர்... வெளுத்துவாங்கிய இஸ்ரேல் தூதர்

First Published Nov 29, 2022, 10:13 AM IST

பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கோவாவில் நடைபெற்ற 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 

விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரிலீசான இந்தி திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. 1990-களில் காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகள் தலைதூக்கியதை அடுத்து, அங்குள்ள இந்துக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சமயத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்டன. அதனை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான முதல் படமும் இதுதான். வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் கிட்டத்தட்ட 350 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து சாதனை படைத்தது. பிரதமர் மோடியும் இப்படத்தை பார்த்து படக்குழுவினரை வியந்து பாராட்டினார். அதேபோல் பாலிவுட் பிரபலங்களும் இப்படத்தை புகழ்ந்து பேசினர்.

இதையும் படியுங்கள்... நடிகர் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரன் மீது ‘செக்’ மோசடி வழக்கு

இவ்வாறு பாலிவுட்டால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் கோவாவில் நடைபெற்ற 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சுமார் 9 நாட்கள் இவ்விழா நடைபெற்றது. 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இந்த விழாவின் இறுதி நாளான நேற்று இதன் தலைமை நடுவரான இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நாதவ் லபிட் பேசினார்.அப்போது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் இந்த விழாவில் திரையிடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக அவர் பேசியுள்ளார். இது மோசமான பிரச்சார தன்மை கொண்டது. இது நாகரீகமற்ற திரைப்படம் என்றும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த விழாவில் இதுபோன்ற படங்களை திரையிடுவது பொருத்தமானதாக இல்லை என்று அவர் வெளிப்படையாக கூறிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

தி காஷ்மீர் பைல்ஸ் படம் குறித்து நாதவ் லிபிட் அளித்து இருக்கும் விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நயோர் கிலோன் எழுதி இருக்கும் கடிதத்தில், இந்திய கலாச்சாரத்தில் விருந்தினர் கடவுளைப் போன்றவர்கள் என்று கூறுகின்றனர். நீதிபதிகள் குழுவின் தலைவராக இந்திய அழைப்பை மிக மோசமான முறையில் தவறாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அத்துடன் அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலை அவமதித்து இருக்கிறீர்கள். இதுபோன்ற விமர்சனத்தை முன்வைத்ததற்காக நீங்க வெட்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... பிரதமர் மோடியை நேரில் பார்த்தால்... இந்த கேள்வியை கண்டிப்பா கேட்பேன்... நடிகர் சிம்பு ஓபன் டாக்

click me!