தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர் என்றால் அது சிம்பு தான். சிம்பு என்றாலே வம்பு என சொல்லும் அளவுக்கு இவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் எந்தவித சர்சைகளிலும் சிக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்த பேட்டியில் அவரிடம் அரசியல் பற்றி பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன. இதற்கு செம கூலாக அவர் பதிலும் அளித்திருக்கிறார்.
அதன்படி முதலில், தமிழ்நாட்டில் தாமரை மலருமா... மலராதா என்கிற கேள்வியை ரசிகை ஒருவர் கேட்கிறார். பாஜக-வை சூசகமாக சுட்டிக்காட்டி தான் இந்த கேள்வி அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சிம்பு, பொதுவாக எடுத்துக்கொண்டால் தாமரை தண்ணி ஊற்றினாலே வளரும் என தனக்கே உரித்தான பாணியில் சிம்பு அளித்த பதிலை கேட்டு அனைவரும் சிரித்தனர்.
அடுத்ததாக, மற்றொரு ரசிகை ஒருவர், மோடியை பார்த்தால் என்ன கேள்வி கேட்பீங்க என கேட்க, இதற்கு சிம்பு அளித்த பதில் தான் அல்டிமேட். மோடியை பார்த்தால், சார் டீ-யே குடுத்துட்டு இருந்திருக்கலாமோனு தோணுதா சார்னு கேட்ருப்பேன் என சொல்லிவிட்டு சிம்பு குலுங்கி குலுங்கி சிரித்தார்.
இதையும் படியுங்கள்... நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம்... மாப்பிள்ளை இவரா? - காட்டுத்தீ போல் பரவும் தகவல்... பின்னணி என்ன?
இதையடுத்து ரசிகர் ஒருவர் சிம்புவிடம், உங்களது வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில், உங்களது தாயார் எவ்வளவு உதவியாக இருந்துள்ளார் என்பது பற்றி கேட்டார். இதற்கு பதிலளித்த சிம்பு, பீப் பாடல் சர்ச்சையின் போது நடந்த சிலவற்றை கூறினார். அந்த சர்ச்சைக்கு முன்பு வரை என அம்மா ஒரு பேட்டி கூட கொடுத்ததில்லை. அந்த சமயத்தில் உலகமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் எனக்காக உடனிருந்து குரல் கொடுத்தது என்னால் மறக்க முடியாது என சிம்பு கூறினார்.