தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபாஸ், தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துவிட்டார். இதற்கு காரணம் அவரின் பாகுபலி படம் தான். அப்படத்திற்கு பின்னர் அவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்படுவதோடு, பான் இந்தியா அளவில் வெளியிடப்பட்டும் வருகிறது.