மோகன்லால் முன்பே மோசமாக நடந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்! கடுப்பில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் பரபரப்பு

First Published | Apr 11, 2023, 4:02 PM IST

அண்மையில் துவங்கப்பட்ட மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில், மோகன்லால் முன்பே போட்டியாளர் ஒருவர் மிகவும் மோசமாக நடந்து கொண்ட நிலையில்.. மோகன்லால் திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

ஹிந்தியில் பிக்பிரதர் என்கிற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, துவங்கப்பட்டது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்தியில் 15  சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
 

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் டைட்டிலை வென்றார். இவர் இந்த டைட்டிலை கைப்பற்றியது  கடும் விமர்சனங்களுக்கும் ஆளானது.  இதைத்தொடர்ந்து பிக்பாஸ்  சீசன் 7  நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

ஏப்ரல் 30 உன்னை கொன்னுடுவேன்... சல்மான் கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்!

Tap to resize

இது ஒரு புறம் இருக்க, மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி,  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துவங்கியது. மிகவும் பரபரப்பாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஆரம்பத்திலேயே பல பிரச்சனைகள், சண்டை சச்சரவுகள் என களைகட்ட துவங்கியுள்ளது. மோகன் லாலே, கடுப்பாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் எவ்வளவு கடுப்பேறியிருப்பார்கள் என்று...

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை, ஈஸ்டர் வாழ்த்துக்களோடு மிகவும் உற்சாகமாக தொடங்கினார் மோகன்லால்.  அதே போல் போட்டியாளர்களை காண ராஜஸ்தானில் இருந்து, பல மணிநேரம் ட்ராவல் செய்து வந்து நிகழ்ச்சியில்  கலந்து கொண்டுள்ளார். ஆனால் போட்டியாளர் ஒருவர் மோகன் லாலையே அவமானப்படுத்துவது போல் நடந்து கொண்டது தான் பரபரப்பை ஏற்படுத்தியது.

வயிற்றில் குழந்தையோடு கொழுக்கு... மொழுக்குன்னு இருந்த ஸ்ரேயாவா இப்படி? ஆச்சர்யடுத்தும் ட்ரான்ஸ்பர்மேஷன்!

பிக்பாஸ் மலையாளம் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அகில் மாறார் என்கிற போட்டியாளர், முதல் தன்னுடைய சக போட்டியாளர்களான ஏஞ்சலினா, மற்றும் சாகர் ஆகியோரை மோசமாக பேசியதற்காக மன்னிப்பு கேட்க சொன்னார் மோகன் லால். அவர் கூறியபடி அகில் மன்னிப்பு கேட்டார். பின்னர் அகில் கையில் இருந்த கேப்டன் பேண்ட்டை சாகரிடம் கொடுக்க சொன்ன போது, அந்த பேண்டை கழட்டி கையில் கொடுக்காமல் தூக்கி வீசினார்.

அகிலின் இந்த மோசமான செயலால் கடுப்பான, மோகன் லால்... பல மையில் தூரம் போட்டியாளர்களுக்காக நான் வந்த போதிலும், தன்னை அவமதிப்பது போல் அகில் நடந்து கொண்டதால் லைவ்வை நிறுத்த கூறியது மட்டும் இன்றி, நிகழ்ச்சியை விடும் வெளியேற துணிந்தார். பின்னர் ஒரு வழியாக அவரை சமாதானம் செய்தனர் பிக்பாஸ் குழுவினர். மேலும் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபட கூடாது என, பிக்பாஸ் அழைத்து அகிலை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே மீண்டும் நிகழ்ச்சியை நடத்தினார் மோகன் லால். இந்த சம்பவம் மலையாள பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சந்தானம் பட ஹீரோயினுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் விஷாகா சிங்! ஷாக்கிங் போட்டோ

Latest Videos

click me!