துபாயில் பிறந்து வளர்ந்தவர் நடிகை விஷாகா சிங். தன்னுடைய ஸ்கூல் படிப்பை வெளிநாட்டில் முடித்தாலும், கல்லூரி படிப்பை டெல்லியில் தான் முடித்தார். மீடியா துறை சம்மந்தமாக, முதுநிலை படிப்பை முடித்துள்ள விஷாகா சிங், கடந்த 2007 ஆம் ஆண்டு மாடலிங் துறையில் கால் பதித்தார். பல விளைபரங்களில் நடித்துள்ள விஷாகா சிங்கை மிகவும் பிரபலமடைய செய்தது என்றால், திரிஷாவுடன் டல் திவ்யா.. தூள் திவ்யா ஆகிட்டா என்கிற விளம்பரம் தான்.