தமிழ் திரையுலக முன்னணி நடிகர், நடிகைகள், குறித்து அப்போது சர்ச்சைக்கு விதமான வகையில் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவர் இப்படி பேசுவதற்கு, பல பிரபலங்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தாலும், நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது... என்கிற தோரணையில், ஒரு காதில் வாங்கி மற்றொரு காதில் அதனை விட்டுவிட்டு, வழக்கம்போல் தன்னுடைய பணியை youtube தளங்களில் தொடர்ந்து வருகிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில்... நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் ஜான் விக்டர் கென்னடி என தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேசிய பயில்வான், விக்ரமுக்கு இந்த பெயரை வைத்து.. இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஸ்ரீதர் என்பதையும் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஸ்வரி ஹிந்து என்பதாலும், அவருடைய தந்தை வினோத் கிறிஸ்தவர் என்பதால் விக்ரம் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை கொண்டவர் என கூறியுள்ளார் .
விக்ரமின் தாயார் ராஜேஸ்வரி, பிரபல இயக்குனரும்.. நடிகருமான.. தியாகராஜரின் தங்கை என்றும் அவர் ஒரு துணை கலெக்டர் என்பதையும் கூறியுள்ளார் பயில்வான். மேலும் தன்னுடைய தாய் மாமன் திரையுலகை சேர்ந்தவராக இருந்தாலும், விக்ரம் அவருடனும், அவருடைய மகள் பிரசாந்துடனும் பேசுவதில்லை. தற்போது விக்ரம் தன்னுடைய மகனை நடிகராக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். மகள் அக்ஷிதாவை கருணாநிதியின் குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து விட்டார் என்பதையும் பதிவு செய்துள்ளார்.
அடடா... அழகு ராட்சசியே! 40 வயதிலும்... பிரெஷ் ரோஜா போல் ரெட் ட்ரெஸ்ஸில்... கேரள ரசிகர்களை அசர வைத்த குந்தவை!
தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்காக ரிஸ்க் எடுக்கும் விக்ரம், சேது, அந்நியன், ஐ, உள்ளிட்ட படங்களில் தன்னுடைய உடம்பை வருத்தி நடித்திருந்தார் என கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால் அதனை அவர் ரகசியமாக வைத்துக்கொண்டு வெளியே சொல்லாமல் மீண்டு வந்தார் என்று பயில்வான் கூறியுள்ளது தான் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன், படத்தின் முதல் பாகம் வெளியீட்டுக்கு முன்னர், நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் விக்ரம் தரப்பில் இருந்து, அவரின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் விக்ரம் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ஆடியோ லாஞ்சிலும் கலந்து கொண்டார். எனவே விக்ரமின் உடல்நிலை குறித்து கவலையில் இருந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் திடீரென பயில்வான் , மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல விஷயங்களில் தன்னுடைய யூகங்களை கூறி, ரசிகர்களை பதற வைத்து வரும் பயில்வான் கூறியது உண்மையா? என்று சந்தேகத்துடன் பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்கமுடிகிறது.
சிட்டாடெல் பிரீமியரில் ... சமந்தா போட்டிருந்த உடை மற்றும் நகையின் மதிப்பு இத்தனை கோடியா! கேட்டாலே ஜெர்க் ஆகுதே
தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ, விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களையே மிரள வைத்தது. காரணம் இந்த வீடியோவில் விக்ரம், ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறி, சொட்டை தலையில் பிரமிக்க வைத்தார். மேக்கிங் வீடியோவே இந்த ரகம் என்றால் படம் எப்படி இருக்கும் என... இப்போதே படத்தை பார்க்க வேண்டும் என்கிற தங்களின் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.