கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடித்து, ரசிகர்கள் மனதில் ஈடுஇணையிலா ஹீரோயினாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் த்ரிஷா தற்போது, பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி... இப்படத்திற்கு தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் செலவு செய்த மொத்த பட்ஜெட்டையும் முதல் பாகத்திலேயே பெற்று கொடுத்தது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, சோபிதா துலி பாலா ஆகியோர் பம்பரமாக சுழன்று இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்து வருகிறார்கள்.
மேலும் தன்னுடைய உடைக்கு ஏற்றாப்போல், மூன்று லைன் நெக் பீஸ் மற்றும் அதற்க்கு ஏற்றாப்போல் கம்மல் அணிந்து... வேற லெவல் அழகில் ஜொலித்தார்.