சின்னத்திரை ரசிகர்கள் மனங்களை கொள்ளைகொண்ட.. ‘கண்ணெதிரே தோன்றினால்’ 250 எபிசோட்களை நிறைவு செய்தது!

First Published | Apr 21, 2023, 7:05 PM IST

மாளவிகா அவினாஷ் மற்றும் ஸ்வேதா கெல்கே நடித்துள்ள ‘கண்ணெதிரே தோன்றினால்’ சீரியல் 250 எபிசோட்களை நிறைவு செய்துள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கலைஞர் தொலைக்காட்சியில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் ‘கண்ணெதிரே தோன்றினால்’. சன் டிவி தொடரான, 'வானத்தை போல' சீரியலில் இருந்து விலகிய, ஸ்வேதா இந்த தொடரில் நாயகியாக அறிமுகமாகினார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் இந்த தொலைக்காட்சி தொடர் தற்போது 250 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. 

மாளவிகா அவினாஷ் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த சீரியலில் ஸ்வேதா கெல்கே ஹீரோயினாக நடித்துள்ளார். மிகவும் சுவாரசியமான களத்துடனும்... திருப்புமுனைகளுடனும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டாப் 10 டி.ஆர்.பி பட்டியலில் இடம்பிடிக்க வில்லை என்றாலும், ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல்களில் ஒன்றாக உள்ளது.

மீண்டும் புதிய சாதனை படைத்திருக்கும் ராம்சரண்- உபாசனா தம்பதி! உற்சாகத்தில் வாழ்த்து கூறும் ரசிகர்கள்!

Tap to resize

இந்நிலையில் இந்த சீரியல் சுமார் 250 எபிசோடுகளுடன்... புதிய மைல் கல்லை எட்டியுள்ளதை தொடர்ந்து, இந்த தகவலை சீரியல் குழு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.  மேலும் சீரியல் குறித்து  இயக்குநர் ஆர்.ஆர்.கார்த்திகேயன், கூறுகையில், "கண்ணேரித் தோன்றினால், 250 எபிசோடுகளுடன்...  அதன் மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்; அந்தத் தொடரின் முழுமையான 'பயணம்' என் கேரியருக்கு உயிர் கொடுத்தது" என்றார்.
 

இந்த மைல்கல் குறித்து நடிகை ஸ்வேதா கெல்கே மகிழ்ச்சி தெரிவித்தார். அவர், "இயக்குனர் ஆர்.ஆர். கார்த்திகேயனுடன் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, மேலும் கன்னெதிரித் தொண்டரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்." என்றார். மேலும் இந்த தொடரில் மாளவிகா அவினாஷ், ஜெயஸ்ரீ ,ஜீவன் ஜி, ரேகா கிருஷ்ணப்பா, கவிதா சோலைராஜா, கோவை பாபு, வைஷு ஜெயச்சந்திரன், தேஜாஸ் கவுடா, ரஞ்சித் கோனேட்டி, சோம் சௌமியன், ஸ்வேதா பி, மதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

சிட்டாடெல் பிரீமியரில் ... சமந்தா போட்டிருந்த உடை மற்றும் நகையின் மதிப்பு இத்தனை கோடியா! கேட்டாலே ஜெர்க் ஆகுதே

Latest Videos

click me!