தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டதால், அதற்கான புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் விக்ரம். இது பான் இந்தியா படமாக ரிலீஸாக உள்ளதால் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் படத்தை புரமோட் செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரம், அப்போது போட்டோஷூட் ஒன்றையும் நடத்தினார்.