மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ரம்யா பாண்டியன். தற்போது பல்வேறு இளம் நடிகைகள் ரசிகர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தி வரும் யுக்தியாகவும் இந்த மொட்டைமாடி போட்டோஷூட் மாறி உள்ளது. அதற்கு விதை போட்டது ரம்யா பாண்டியன் தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மொட்டை மாடியில் அவர் கவர்ச்சியாக நடத்திய போட்டோஷூட் தான் அவரை இந்த அளவுக்கு பேமஸ் ஆக்கியது.
அந்த வகையில் தற்போது சுடிதார் அணிந்து அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் சேலையைப் போல் சுடிதாரிலும் நீங்க செம்ம அழகாக இருக்கிறீர்கள் எனவும், தொடர்ந்து இதுபோன்று போட்டோஷூட் நடத்துமாறும் ரம்யா பாண்டியனுக்கு அன்புக்கட்டளை போட்டு வருகின்றனர்.