தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில், முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா... தன்னுடைய திறமையால் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என முன்னேறி சென்றுகொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி இருக்கும் தகவல் ஏற்கனவே வெளியான நிலையில், இதைத்தொடர்ந்து பிரபல ஹாலிவுட் தொடரான 'சிட்டாடெல்' தொடரின், இந்திய பதிப்பில் பிரியங்கா சோப்ரா நடித்த வேடத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார்.