பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக மாறியவர் மும்பையை சேர்ந்த,அமுல் பேபி... நடிகை ஹன்சிகா. தன்னுடைய முதல் படத்திலேயே... திறமையான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான, ஃபிலிம் பேர் விருதை வென்றார்.
இதை தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் அம்மணி பிஸியாக நடித்தாலும்... இவருக்கு அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி படங்களை அள்ளிக்கொடுத்தது என்னவோ தமிழ் திரையுலகம் தான். நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமான நடிகை ஹன்சிகா பின்னர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக எங்கேயும் எப்போதும், சிம்புவுக்கு ஜோடியாக வாலு, விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், ஆர்யாவுக்கு ஜோடியாக சேட்டை, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மான் கராத்தே என முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தார்.
சிட்டாடெல் பிரீமியரில் ... சமந்தா போட்டிருந்த உடை மற்றும் நகையின் மதிப்பு இத்தனை கோடியா! கேட்டாலே ஜெர்க் ஆகுதே
நடிகர் சிம்புவுடன் நடித்த போது காதல் சர்ச்சையில் சிக்கினார் ஹன்சிகா. இதை தொடர்ந்து, இருவருடைய உறவு திருமணம் வரை சென்ற நிலையில்... பின்னர் திடீர் என கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்தனர். சிம்புவுடனான காதல் தோல்விக்கு பின்னர், மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் திரைப்பட கேரியர் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருந்த நிலையில்... திடீர் என அவரின் காதல் விவகாரம் வெளியே கசிய துவங்கியது. பின்னர், அதிரடியாக தன்னுடைய காதலர் புரொபோஸ் செய்த புகைப்படங்களை வெளியிட்டு.. விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவலையும் கூறினார். அதே சமயம் ஹன்சிகா திருமணம் செய்ய உள்ளது அவருடைய நெருங்கிய தோழியின் கணவரானஸ் சோஹைல் கதூரியா என்பது தெரிய வந்த பின்னர், சில சர்ச்சையான விமர்சனங்களுக்குள் சிக்கினார்.
சுமார் அரைடஜன் படங்கள் ஹன்சிகாவின் கைவசம் உள்ள நிலையில்... அவ்வப்போது அளவுக்கு அதிகமான அவர்ச்சியில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை சிலிர்க்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஹாட் உடையில்... தன்னுடைய வாழைத்தண்டு கால்களை காட்டி, ஹன்சிகா வெளியிட்டுள்ள போட்டோஸ் தாறுமாறாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.