Indian 3 : வெயிட்டிங் லிஸ்டில் இருந்த இந்தியன் 3... மீண்டும் தூசிதட்டி எடுத்த ஷங்கர் - எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Oct 08, 2026, 04:26 PM IST

Indian 3 Movie Release date : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 3 திரைப்படம் மீண்டும் உயிர்பெற்றுள்ள நிலையில், அதன் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
15
Indian 3 Release Update

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கமல் ஹாசன். தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலும் பல்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அவர், ரசிகர்களால் உலக நாயகன் என அன்புடன் அழைக்கப்படுகிறார். கமல் ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் இந்தியன். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கமல் ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் சேனாபதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பார்ட் 2 படங்களில் மொக்கை வாங்கிய தமிழ் படங்கள்: கேஜிஎஃப் 2, புஷ்பா 2 படம் மட்டும் வசூல் குவிப்பது எப்படி?

25
இந்திய 2 எதிர்கொண்ட சிக்கல்கள்

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பு முடங்கியது. அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு வந்ததால், படத்தின் வேலைகள் மீண்டும் தடைபட்டன. ஒருகட்டத்தில் எல்லா பிரச்சனையையும் முடித்து படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடத்தி வந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் படத்தை அப்படியே கிடப்பில் போட்டிருந்தார் ஷங்கர்.

35
சொதப்பிய இந்தியன் 2

பின்னர் ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை கையிலெடுத்து ஷூட்டிங்கை முடித்தது. இதையடுத்து இந்தியன் 2 கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தின் மீதான எதிர்பார்ப்புடன் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாகம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் ட்ரோல்களும் வந்தன. இதனால், திட்டமிடப்பட்டிருந்த இந்தியன் 3 திரைப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர். கடந்த ஓராண்டாக இந்தியன் 3 பற்றி எந்தவித அப்டேட்டும் வெளிவரவில்லை.

45
மீண்டும் தொடங்கும் இந்தியன் 3

இந்நிலையில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 3 குறித்து தற்போது முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்தியன் 3 படத்தின் கதை முதல் பாகத்திற்கு முன்பு நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட ப்ரீக்வெல் கதையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சேனாபதியின் இளமை கால வாழ்க்கை மற்றும் அவரின் பின்னணி உள்ளிட்ட விஷயங்கள் படத்தில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

55
இந்தியன் 3 எப்போ ரிலீஸ்?

இந்தியன் 2 ஏற்படுத்திய எதிர்மறையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதன் மூன்றாம் பாகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 3 படத்தின் மீது கமல்ஹாசன் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்தியன் 2 புரமோஷனின் போது உங்களுக்கு இந்தியன் முதல் பாகம் பிடிக்குமா இரண்டாம் பாகம் பிடிக்குமா என கேட்கப்பட்டபோது, தனக்கு இந்தியன் 3 தான் பிடிக்கும் என சொல்லி இருந்தார் கமல். அப்படி ஆண்டவரையே இம்பிரஸ் பண்ணியிருந்த இந்தியன் 3 வருகிற 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்திய ராயன்... முதலிடத்தை இழந்த இந்தியன் 2! 2024-ல் அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories