இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வஹிதா வெளியிட்டு (பின்னர் நீக்கப்பட்ட) வீடியோக்களில் தெரிவித்திருப்பதாவது;
கடந்த அக்.4-ம் தேதி கத்திப்பாராவில் முத்துக்குமரனைச் சந்தித்ததாகவும், அப்போது அவர் தன்னை அன்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் (அதை ஒருவகையான ‘க்யூட் கடத்தல்’ என்றும்) வஹிதா கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகி, 5 வயதில் ஒரு மகன் இருப்பதும், தான் ஒரு காதல் முறிவில் (breakup) இருப்பதும் முத்துக்குமரனுக்கு முன்பே தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களாகத் தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தபோது முத்துக்குமரன் தன்னிடம் ஆறுதலாகப் பழகியதாகக் கூறியுள்ள அவர், சிறுவயது முதலே இந்த அன்பிற்காகத் தான் ஏங்கினேன்; அவர் பேசியே என்னை மயக்கிவிட்டார். 'உன் விருப்பம் இல்லாமல் உன்னைத் தொட மாட்டேன்', 'நாளைக்கே உனக்குத் தாலி கட்டுகிறேன்' என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரக்கணக்கான முத்தங்களைக் கொடுத்தார். தாலி கட்டுவதாகச் சொன்னதை நம்பி, இருவரும் உடல் ரீதியாகவும் இணைந்தோம் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் அதிகாலை தன்னை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டு, பின்னர் மெசேஜ் அனுப்பியதாகவும், ஆனால் அதன்பின் தொடர்ந்து உறவில் (relationship) இருக்க முடியாது எனக் கூறி கழற்றிவிட்டதாகவும், இதனால் தான் முற்றிலும் உடைந்து போய்விட்டதாகவும் வேதனை உடன் பகிர்ந்துள்ளார்.