பொன்ராம் இயக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த இவர், அடுத்ததாக தெகிடி, மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்தார். பின்னர் இரண்டாம் குத்து, பவுடர் போன்ற படங்களில் இவர் நடித்திருந்தாலும், நடிப்பின் மூலம் இவருக்கு பெரியளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியில் குதித்தார் ஷாலு ஷம்மு.