Vijay son Jason sanjay
தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவரை சினிமாவில் அவரது தந்தை அறிமுகப்படுத்தினாலும், பின்னர் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி இன்று தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 படத்திற்காக தயாராகி வருகிறார்.
vijay son
தளபதி 68 பட பணிகளுக்காக நடிகர் விஜய் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவரது மகன் பற்றிய ஒரு மாஸான அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மகனை ஹீரோவாக்க ஆசைப்பட்ட விஜய்யிடம் தனக்கு டைரக்ஷனில் தான் ஆசை என ஓப்பனாக சொன்ன சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜய் மகன் சஞ்சய்! அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா!
Jason sanjay debut movie
முதல் படமே லைகா போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கமிட் ஆகி இருக்கும் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனர் சுபாஸ்கரனை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதற்குமுன் சில குறும்படங்களை இயக்கி இருக்கும் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்குனராக அறிமுகமாகி இருப்பது கோலிவுட்டுக்கே மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக தான் உள்ளது.
vijay sethupathi
இது ஒருபுறம் இருக்க, ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்கிற தகவலும் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. அதன்படி மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் லைகா நிறுவனம் இதுகுறித்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் சீக்ரெட் ஆக வைத்துள்ளது.