இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜய் மகன் சஞ்சய்! அதிகாரபூர்வமாக அறிவித்த லைகா!

First Published | Aug 28, 2023, 4:07 PM IST

தளபதி விஜய்யின் மகன் சஞ்சய், இயக்குனராக அறிமுகமாக உள்ள தகவலை அந்த படத்தை தயாரிக்க உள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
 

தளபதி விஜய்யை தொடர்ந்து, அவரின் மகன் ஜேசன் சஞ்சய் எப்போது திரையுலகில் காலடி எடுத்து வைப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 

சென்னையில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த கையேடு, மேற்படிப்புக்காக சஞ்சய் அமெரிக்கா சென்ற நிலையில், சினிமா மேக்கிங் குறித்த படிப்பை தேர்வு செய்து படித்து வந்தார். இவர் படிக்கும் போதே தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சில, ஷார்ட் ஃபிலிம் எடுத்து யூடியூப் தளத்திலும் வெளியிட, அவரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் என் முன்னாள் காதலன்! குணசேகரனை தூக்கி எறிந்துவிட்டு ஜீவானந்தத்தை தேடி செல்லும் ஈஸ்வரி! அதிரடி திருப்பம்!
 

Tap to resize

சஞ்சய்க்கு தந்தையை போல் நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், தன்னுடைய தாத்தாவை போல் படம் இயக்கவே ஆசைப்பட்டார். சஞ்சய்யை திரைப்படத்தில் நடிக்க வைக்க சில பெரிய பெரிய இயக்குனர்கள் கூட, தேடி சென்று வாய்ப்பு கொடுத்த நிலையில்... சஞ்சய் அதை வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே போல் விஜய்யிடம் சிலர் அவரின் மகனை நடிக்க வைக்க கூறி கேட்டபோது கூட... விஜய் மிகவும் கூலாக அது சஞ்சய்யின் விருப்பம் தான் அவருக்கு இஷ்டம் இருந்தால் நடிக்கட்டும் என கூறியதாகவே தெரிகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு சென்னை திம்பிய சஞ்சய், தன்னுடைய முதல் படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்க உள்ளது உறுதியாகியுள்ளது. சஞ்சய் யாருடைய உதவியும் இன்றி, லைகா நிறுவனத்திடம் கூறிய கதை, அவர்களுக்கு மிகவும் பிடித்து போனதால் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தேவயானி, ஆல்யா மானசா, என கர்ப்பமாக இருக்கும் போது கூட சீரியலில் நடித்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

ஜேசன் சஞ்சயை தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, லைகா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யின் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் விஜய் மகன் சஞ்சய் எந்த மாதிரியான கதைக்களத்தில் படம் இயக்க உள்ளார்? அதில் நடிக்க உள்ளது யார் யார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இதற்கு முன்னர் சஞ்சையை கதாநாயகனாக வைத்து படம் இயக்க சுதா கொங்கரா உள்ளிட்ட சிலர் முயற்சி செய்த நிலையில், படம் இயக்குவதில் மட்டுமே தனக்கு ஆர்வம் உள்ளதால் படத்தில் நடிக்க சஞ்சய் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. தற்போது இயக்குனராக சஞ்சய் அறிமுகமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் விரைவில் நடிகராகவும் மாறுவாரா என்கிற எதிர்பார்ப்பு எழுதி உள்ளது.

இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!

Latest Videos

click me!