Published : Aug 28, 2023, 05:27 PM ISTUpdated : Aug 28, 2023, 05:34 PM IST
'ஜெயிலர்' படத்தில் இருந்து முக்கிய காட்சியை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் வெளியாகி இரண்டு வாரத்தை கடந்தும், பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சுமார் 600 கோடி வசூலை நெருங்கி வரும் இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
25
மேலும் ரஜினிகாந்தின் மகனாக வசந்த் ரவியும், மருமகளாக மிர்ணாவும் நடித்துள்ளனர். தமன்னா, சுனில் ,யோகி பாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து அசத்தி உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பின்னர், நெல்சன் திலீப் குமார் இயக்கிய இந்த படம் தாறுமாறு ஹிட் அடித்துள்ள நிலையில், சமீபத்தில் தான் பட குழுவினர் மிகவும் எளிமையாக இந்த படத்தின் வெற்றியை கொண்டாடினர். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிலையில் தற்போது 'ஜெயிலர்' படத்தில் இருந்து ஒரு காட்சியை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம், சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
45
அதாவது 'ஜெயிலர்' படத்தில், RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து குணச்சித்திர நடிகர் ஒருவர் நடித்திருந்தார். சில நிமிடமே அவரின் காட்சி இடம்பெறும் நிலையில், அதில் அவர் பெண்களுக்கு எதிராக சில கருத்துக்களை பேசும் படி காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இதுபோல் தங்களின் ஜெர்சியை அணிந்து கொண்டு பேசுவதால்... "எங்கள் அணியின் நட்பெயர் கெட்டுப்போகும் எனக் கூறி ஐபிஎல் அணியான, RCB அணியின் தரப்பில் இருந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் செப்டம்பர் 1ஆம் தேதி முதல், RCB அணியின் ஜெஸ்ஸி அணிந்து படமாக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்க கோரி தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டார். மேலும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படம் ஒளிபரப்பாகும் போது இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.