Jawan Box Office: ஹிஸ்டாரிக் காலெக்ஷன்.! முதல் நாளே பாலிவுட் திரையுலகை அதிர வைத்த 'ஜவான்' பட வசூல்!

First Published | Sep 8, 2023, 6:01 PM IST

'ஜவான்' திரைப்படம், முதல் நாளே பாலிவுட் திரையுலகில் வசூலில் மிரட்டி உள்ளது. மேலும் ஹிந்தியில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் தொகை பற்றிய தகவலை படக்குழு அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Jawan Director Atlee

இயக்குனர் அட்லீ 'பிகில்' படத்திற்கு பின்னர், தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குவதை உறுதி செய்த பின்னர், கொரோனா, ஷாருக்கானின் சொந்த பிரச்சனை என பல்வேறு இடைஞ்சல்கள் வந்த போதும், அனைத்தையும் தாண்டி ஒரு வழியாக ஜவான் படத்தை எடுத்து முடித்தார். இந்த படத்தை ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மென்ட் மூலம் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்துள்ளார். 

Jawan Movie Review

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், நேற்று இந்த திரைப்படம் வெளியானது. மேலும் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான, 'பதான்' திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்த நிலையில், 'ஜவான்' திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்குமா? என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாளே 'ஜவான்' படத்தின் வெற்றியை உறுதி செய்தது ரசிகர்களின் கருத்துக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் விமர்சனங்கள். குறிப்பாக இதுவரை அட்லீ இயக்கிய படங்கள், அந்த படத்தின் சாயலில் உள்ளது... இந்த படத்தின் சாயலில் உள்ளது என குறை கூறி வந்தவர்களுக்கு பக்கா பதிலடியாக இந்த படத்தை இயக்கி இருந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்துவின் Networth..! வைரலாகும் தகவல்!
 

Tap to resize

Jawan Released Pan India Movie

'ஜவான்' படம் ஹிந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற மொழிகளிலும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியுள்ளது. அதை போல், இந்த படத்தில் தமிழ் நடிகர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவரை தொடர்ந்து,  பிரியாமணி, யோகி பாபு போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருந்தனர். அதேபோல் அனிருத் 'ஜவான்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். இவர் இசையில் வெளியான பாடல்களை விட... BGM திரையரங்குகளை அதிர வைத்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Jawan First Day Collection

படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 'ஜவான்' கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணையும் என தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவலில் "உலக அளவில் ஜவான் முதல் நாளிலேயே 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. 

கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
 

Shahrukhan Jawan Create Recored

இந்நிலையில் சற்று முன்னர், ஹிந்தியில் மட்டுமே 'ஜவான்' திரைப்படம் 129.6 கோடி வசூலித்துள்ளதாம். மேலும் ஹிந்தியில் முதல் நாளிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சரித்திர சாதனையை 'ஜவான்' திரைப்படம் படைத்துள்ளது. உலகம் முழுவதும் ஷாருக்கானுக்கு ரசிகர்கள் உள்ளதால்... எப்படியும் உலக அளவில் முதல் நாளே 175 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Latest Videos

click me!