இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பலரில் நடிகர் மாரிமுத்துவும் ஒருவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து 1990-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். ஆரம்ப நாட்களில் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த அவர், கவிஞர் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்ததால் வைரமுத்து உடன் நெருக்கமானார் மாரிமுத்து. பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மாரிமுத்து, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார். மேலும் மணி ரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.