Published : Sep 07, 2023, 11:41 PM ISTUpdated : Sep 08, 2023, 01:51 AM IST
பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு சகோதரியுமான அனிதா விஜயகுமாரின் பிறந்நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
பழம்பெரும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவரது முதல் மனைவி முத்துக்கண்ணு ஆகியோருக்கு கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். விஜயகுமார் - முத்துக்கண்ணு தம்பதியின் மகன்தான் பிரபல நடிகர் அருண் விஜய்.
211
Anitha Vijayakumar Instagram Photos
சினிமாக் குடும்பத்தில் பிறந்தாலும் அனிதா விஜயகுமார் திரைத்ததுறைக்கு வரவில்லை. சினிமாவுக்குப் பதிலாக மருத்துவத் துறையைச் தேர்ந்தெடுத்த அவர் மருத்துவராக இருக்கிறார்.
அனிதா விஜயகுமார், அக்கா கவிதா விஜயகுமார், தம்பி அருண் விஜய், தங்கைகள் ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோருடன் நெருக்கமாக பேசி பழகி வருகிறார்
611
Arun Vijay sister Anitha pics
அனிதா விஜயகுமார் மருத்துவராக பிசியாக இருக்கும் நிலையில், ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். மகள் மற்றும் சகோதரிகளுடன் ம்பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகை சினேகா, ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி, இயக்குநர் ஹரியின் மனைவியும் ப்ரீத்தா விஜயகுமார் உள்ளிட்ட பலர் அனிதா விஜயகுமார் பிறந்நாளில் கலந்துகொண்டு வாழ்த்தியுள்ளனர்.
1111
Anitha Vijayakumar birthday celebration pics
அனிதா விஜயகுமார் ஒவ்வொருவருடனும் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.