விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினா! சினிமாவுக்கு ரெடியாகும் வனிதா மகள் ஜோவிகா!

Published : Sep 06, 2023, 11:19 PM IST

வனிதா விஜயகுமாரின் மகள், ஜோவிகாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் அவர் சினிமாவில் என்ட்ரி கொடுக்க ரெடியாவிட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

PREV
16
விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஹீரோயினா! சினிமாவுக்கு ரெடியாகும் வனிதா மகள் ஜோவிகா!

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

26

அதிக படங்களில் தோன்றாத அவர், பல வருடம் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டார். அதனால் அவருக்கு புதிய வாய்ப்புகள் வந்தன. 

36

குக் வித் கோமாளி முதல் சீசனில் தன் சமையல் திறமையால் அசத்தி பட்டத்தையும் வென்றார். அப்போது, படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார்.

46

இந்நிலையில், வனிதாவின் மகள் ஜோவிகா சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்திருக்கிறார். ஜோவிகா யூடியூப் வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக மாறியுள்ளார்.

56

18 வயது பெண்ணாக இருக்கும் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் இடையில் பேச்சு உருவானது. ஆனால் அது நடக்கவில்லை. ஆனால், ஜோவிகா தொடர்ந்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அழகான போட்டோக்களை ரிலீஸ் செய்து சினிமாத்துறையின் கவனத்தை இழுத்து வருகிறார்.

66

இப்போது ஜோவிகாவின் அம்மா வனிதா, மகளின் ஸ்டைலிஷ் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, “என் உலக அழகி ஜோவிகா. லவ் யூ. நீ என்ன செய்தாலும் அதற்கு கடவுளின் ஆசி கிடைக்கும்” என்று கொஞ்சலாகக் கூறியுள்ளார். இதனால், ஜோவிகா விரைவில் ஹீரோயின் ஆகப்போகிறாரா என்ற சந்தேகம் கிளம்பி இருக்கிறது.

click me!

Recommended Stories