நம்புங்க இவங்க வயசு 50.. அப்பா அம்மாவோடு ஜோராக போஸ் கொடுத்த வனிதாவின் அக்கா அனிதா விஜயகுமார்!
பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் அவர் முதல் மனைவி முத்துக்கன்னு ஆகியோருக்கு பிறந்த மூன்று குழந்தைகள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார் மற்றும் பிரபல நடிகர் அருண் விஜய். இதில் நடிப்பு துறைக்கு வராமல் ஒரு மருத்துவராக பயணித்து வருபவர் தான் அனிதா விஜயகுமார்.
Anitha
பிரபல தமிழ் நடிகருக்கு பிறந்த பொழுதும், தனது குடும்பத்தில் தனது அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று ஐந்து பேருமே நடிப்பு துறையில் வலம் வந்த பொழுதும், நடிப்பின் மீது நாட்டம் காட்டாமல் சென்ற ஒரே ஒருவர் தான் அனிதா விஜயகுமார்.
Arun vijay sister anitha
கோகுல கிருஷ்ணன் என்பவரை மணந்து தற்பொழுது கத்தார் நாட்டில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார் அனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதை தொட்டுவிட்ட டாக்டர் அனிதா விஜயகுமாருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Arun vijay sister
அக்கா கவிதா விஜயகுமார், தம்பி அருண் விஜய், தங்கைகள் ப்ரீத்தா விஜயகுமார் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகிய நால்வருடன் இன்றளவும் நெருக்கமாக பேசி பழகி வருகிறார் இவர். அவர்களோடு அடிக்கடி தனது நேர்த்தியும் செலவழித்து வருகின்றார்.
Anitha Vijayakumar Photos
தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தனது மகள் மற்றும் சகோதரிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தனது முக்கிய பொழுதுபோக்காக கொண்டவர் மருத்துவர் அனிதா விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் அவர் தனது ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் வெண்ணிற ஆடை அணிந்து போட்டோ சூட் எடுத்துக் கொண்டதோடு, தனது தாய் முத்துக்கண்ணு மற்றும் தந்தை விஜயகுமாருடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிதா.