Top 10 Richest Indian Actors : திரைப்பட உலகம் பணத்தால் நிறைந்தது. மற்ற துறைகளை விட சினிமா துறையில் சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. பணக்கார நடிகர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள் யார்... அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற விவரம் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தில் உள்ளார். இந்திய நடிகர்களில் மிகவும் பணக்காரர் அவர் தான்.
24
Nagarjuna
நடிகர் ஷாருக் கானுக்கு 7300 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஷாருக்கானுக்கு சொந்தமானது தான். ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதுதான் மற்றவர்களை விட ஷாருக் கானுக்கு சொத்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. ஷாருக்கிற்கு ஒரு படத்திற்கு சுமார் 250 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறதாம். இதுதவிர தனியாக தயாரிப்பு நிறுவனம் நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார் ஷாருக்.
பணக்கார நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் யார் என்று தெரிந்தால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைவார்கள். பாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு 3310 கோடி ரூபாய். தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் இல்லாவிட்டாலும், இவருக்கு சினிமாவை காட்டிலும் பிசினஸில் தான் அதிக வருமானம் வருகிறதாம். முன்னணி நடிகர்கள் பலருக்கும் சினிமா மட்டும் வருமான ஆதாரமாக இல்லை.
44
List of richest Indian film actors in 2025
விளம்பரங்கள் மற்றும் பிற தொழில்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் பெரிய சொத்தாக மாறுகிறது. சொந்தமாக தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருக்கும் பல நடிகர்களும் இந்தியாவில் உள்ளனர். இந்த பட்டியல் தமிழ் சினிமாவில் இருந்து ஒரே ஒரு நடிகர் தான் இடம்பெற்று இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவரின் சொத்து மதிப்பு 450 கோடி ஆகும். அவர் இந்த பணக்கார நடிகர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறார். இந்த லிஸ்ட்டில் விஜய், அஜித் போன்ற கோலிவுட் நடிகர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 பணக்கார நடிகர்கள் லிஸ்ட் இதோ
1. ஷாருக் கான் - 7300 கோடி
2. நாகார்ஜுனா அக்கினேனி - 3310 கோடி
3. சல்மான் கான் - 2900 கோடி
4. அக்ஷய் குமார் - 2500 கோடி
5. ஹ்ரித்திக் ரோஷன் - 2000 கோடி
6. அமீர் கான் - 1862 கோடி
7. அமிதாப் பச்சன் - 1600 கோடி
8. ராம் சரண் - 1370 கோடி
9. சைப் அலி கான் - 1200 கோடி
10. ரஜினிகாந்த் - 450 கோடி