குக் வித் கோமாளி 6 அப்டேட் - மணிமேகலைக்கு பதில் ‘இந்த’ பிக் பாஸ் பிரபலமா?

Published : Mar 24, 2025, 10:39 AM ISTUpdated : Mar 24, 2025, 01:21 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6வது சீசன் தொடங்கப்படுவது எப்போது என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. மேலும் அதில் வர உள்ள புது தொகுப்பாளர் யார் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

PREV
14
குக் வித் கோமாளி 6 அப்டேட் - மணிமேகலைக்கு பதில் ‘இந்த’ பிக் பாஸ் பிரபலமா?

Cook With Comali Season 6 Update : விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக அதிக டிஆர்பி ரேட்டிங் கொடுத்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக சமையல் நிகழ்ச்சி என்றால் பரபரப்பாக இருக்கும், ஆனால் இந்நிகழ்ச்சி அப்படியே அதற்கு உல்டாவானது. இதில் காமெடி நிறைந்திருக்கும். இந்நிகழ்ச்சியின் முதல் நான்கு சீசனை மீடியா மேசன்ஸ் நிறுவனம் தயாரித்தது. மேலும் அப்போது நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்தனர். 

24
Priyanka Deshpande

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் இருந்து மீடியா மேசன்ஸ் விலகியதால் வேறொரு நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த ஷோ ஒளிபரப்பானது. 4 சீசன்களில் இல்லாத அளவு ஒரு சர்ச்சைக்குரிய ஷோவாக குக் வித் கோமாளி சீசன் 5 இருந்தது. அதில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும், போட்டியாளராக கலந்துகொண்ட பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகவும் மாறியது. இதனால் அந்நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே விலகினார் மணிமேகலை. இறுதியாக அந்த சீசனில் பிரியங்கா டைட்டில் வென்றார்.

இதையும் படியுங்கள்... VJ Manimegalai: கொட்டும் பணம்; சென்னையில் சொகுசு அப்பார்ட்மெண்ட் வாங்கிய விஜே மணிமேகலை! இத்தனை கோடியா?

34
Manimegalai

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் ஷகீலா பேசுகையில், ஒரு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர் மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்ததாகவும், அவரிடம் ஆறாவது சீசன் பற்றி கேட்டபோது ஏப்ரல் மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக அவர் கூறினார் என ஷகீலா தெரிவித்துள்ளார். இதன்மூலம் அந்நிகழ்ச்சி வருகிற மே மாதம் முதல் ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

44
Jacquline

அதுமட்டுமின்றி கடந்த சீசனில் இருந்து மணிமேகலை விலகிவிட்டதால் அவருக்கு பதில் யார் தொகுத்து வழங்குவார்கள் என்கிற கேள்வியும் எழுந்து வந்தது. அதன்படி இந்த சீசனில் மணிமேகலைக்கு பதில் ரக்‌ஷனுடன் சேர்ந்து ஜாக்குலின், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ரக்‌ஷனும், ஜாக்குலினும் இணைந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு குட் பை; அதிரடியாக புதிய சேனலுக்கு தாவிய தொகுப்பாளினி மணிமேகலை!

Read more Photos on
click me!

Recommended Stories