இளையராஜா லேடி வாய்ஸில் பாடி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான பாடல் பற்றி தெரியுமா?
இசைஞானி இளையராஜா லேடி வாய்ஸில் பாடிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இசைஞானி இளையராஜா லேடி வாய்ஸில் பாடிய பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்த சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Ilaiyaraaja Sing a Song in Female Voice : இசைஞானி இளையராஜா இசையமைத்த நாட்டுப்புற பாட்டு திரைப்படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளிவந்தது. அப்படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபா தாரேன்’ என்கிற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்துள்ள இந்த கிராமிய பாடலை இசைஞானி இளையராஜா வேறொரு பாட்டை தழுவி தான் உருவாக்கி இருந்தாராம். அது எந்த பாட்டு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இளையராஜாவுக்கு இசை மீது ஆர்வம் வர அவரது அண்ணன் பாவலர் தான் காரணம். அவரும் ஒரு இசைக் கலைஞர் தான். இளையராஜாவின் அண்ணன் பாவலர் இசைக் கச்சேரிகள் நடத்தி மிகவும் பேமஸ் ஆனார். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சார மேடைகளில் இவர் அதிகளவில் கச்சேரி நடத்தி வந்துள்ளார். பாவலரின் இசைக் கச்சேரி என்றாலே அதைக்காண கூட்டம் அலைமோதுமாம். அப்படி தன்னுடைய இசைக் கச்சேரிக்காக பாவலர் எழுதிய பாடலை தழுவி தான் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாட்டை உருவாக்கி இருக்கிறார் இளையராஜா.
இசைஞானி இளையராஜா ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடைய அண்ணன் பாவலரின் இசைக் கச்சேரிகளில் பாடி வந்துள்ளார். அப்படி ஒருமுறை கம்யூனிஸ்ட் கட்சிக்கான பிரச்சாரத்திற்காக இளையராஜாவை பாவலர் அழைத்து சென்றபோது அங்கு ஆண், பெண் பாடும்படி ஒரு பிரச்சார பாடலை எழுதி இருக்கிறார் பாவலர். அப்போது லேடி வாய்ஸில் பாட பாவலர் தன் தம்பி இளையராஜாவை தான் அழைத்து சென்றிருந்தாராம். ஏனெனில் டீன் ஏஜ் ஆரம்பமாகும் முன் ஆண்கள் குரல் சற்று பெண் குரல் சாயலில் இருக்கும் என்பதால் இளையராஜாவை லேடி வாய்ஸில் பாட அழைத்து சென்றிருக்கிறார்
இதையும் படியுங்கள்... Ilaiyaraja meets PM Modi: பிரதமர் மோடியின் பாராட்டுக்கு தலை வணங்குகிறேன்!இளையராஜா நெகிழ்ச்சி பதிவு!
அந்த பிரச்சாரப் பாடலில் ஆண் குரலில் வரும் வரிகளை பாவலர் பாட, பெண் குரலில் வரும் வரிகளை இளையராஜா பாடி இருக்கிறார். அப்படி, ‘ஒத்த ரூவாயும் தாரேன் நான் உப்புமா காபியும் தாரேன்; ஓட்டுப் போடுற பொண்ணே நீ மாட்ட பாத்து போடு’ என பாவலர் பாடி இருக்கிறார். ஏனெனில் அப்போது கம்யூனிஸ்டின் எதிர்கட்சியான காங்கிரஸ் மாடு சின்னத்தில் தான் போட்டியிட்டதாம். பதிலுக்கு இளையராஜா, ‘உன் ஒத்த ரூவாயும் வேண்டாம்; உன் உப்புமா காபியும் வேண்டாம்... ஓட்டு போட மாட்டேன் நீங்க ஊரைக் கெடுக்கிற கூட்டம்’ என பெண் குரலில் பாடுவாராம்.
இப்படியே 10 ரூபாய் வரை இருவரும் மாறி மாறி பாடுவார்களாம். இறுதியாக பெண் சொல்வதைக் கேட்டு ஆண் மனம் மாறி கம்யூனிஸ்டுக்கே ஓட்டுப் போட சம்மதிக்கும்படி அந்த பாடலை எழுதி இருக்கிறார் பாவலர். அரசியல் மேடைக்காக பாவலர் உருவாக்கிய அந்தப் பாடலை மையமாக வைத்து தான் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலை அதே சாயலில் உருவாக்கி இருக்கிறார் இளையராஜா. இந்தப் பாடல் இன்றளவும் திருவிழாக்களில் தவறாமல் இடம்பெறும். அந்த அளவுக்கு காலம் கடந்து கொண்டாடப்படும் ஒரு கிராமியப் பாடலாக அது உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... CM Stalin Meets Ilaiyaraaja | இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர் மு.க ஸ்டாலின் !