விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படமும், மோகன் லால் நடித்த எம்புரான் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் முன்பதிவு நிலவரம் பற்றி பார்க்கலாம்.
Empuraan vs Veera Dheera Sooran Tamilnadu Pre Sales Collection : பண்டிகை காலங்களில் புதுப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் வருகிற ரம்ஜான் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் இருந்து முக்கியமான படங்கள் சில வெளியாகின்றன. அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்றால் மலையாளத்தில் மோகன்லால் நடித்த எம்புரானும், தமிழில் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் ஆகிய படங்கள் தான். எம்புரான் மலையாள சினிமா ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் படமாகும். வீர தீர சூரனும் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படங்களில் ஒன்றாகும்.
24
Veera Dheera Sooran vs Empuraan
எம்புரான் திரைப்படம் முன்பதிவில் சாதனை படைத்து வருகிறது. தற்போது ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் மோகன்லால், விக்ரம் படங்களின் தமிழ்நாடு முன்பதிவு நிலவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு படங்களும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. முன்னணி டிராக்கரான சினிட்ராக்கின் தகவல்களின்படி, எம்புரான் படம் தமிழகத்தில் மட்டும் மார்ச் 27ந் தேதிக்கான முன்பதிவில் 58 லட்சம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் விக்ரமின் வீர தீர சூரன் படத்துக்கு வெறும் 21 லட்சம் தான் கிடைத்துள்ளது.
காட்சிகளைப் பொறுத்தவரை வீர தீர சூரனுக்கு தான் தமிழ்நாட்டில் அதிக காட்சிகள் உள்ளன. வீர தீர சூரன் 206 காட்சிகளில் இருந்து 21 லட்சத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில் எம்புரான் 181 காட்சிகளில் இருந்து 58 லட்சத்தை பெற்றுள்ளது. பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் தான் எம்புரான். இது மலையாளத்தில் இதுவரை வந்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் ஆகும். இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
44
Veera Dheera Sooran
அதேபோல் வீர தீர சூரன் திரைப்படத்தை சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கியுள்ளார். இது அதிரடி திரில்லர் வகையைச் சேர்ந்த படமாகும். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எம்புரான் மற்றும் வீர தீர சூரன் ஆகிய இரண்டு படங்களிலும் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.