இத்தாலி கார் ரேஸில் 3ஆவது இடம் பிடித்த அஜித் அண்ட் கோ – வெற்றியை கொண்டாடிய தருணம் வைரல்!
Ajith Finished With 3rd Place in Italy Car Race : இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
Ajith Finished With 3rd Place in Italy Car Race : இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
Ajith Car Race : இத்தாலி நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 12 ஹவர்ஸ் ஆஃப் முகெல்லோ கார் ரேஸில் அஜித் அணி 3ஆவது இடம் பிடித்துள்ளது. வெற்றியை சக வீரர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அக்டோபர் மாதம் வரையில் சினிமாவிற்கு பிரேக் விட்டுள்ள அஜித் இப்போது கார் ரேஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் விபத்துகளுக்கு பிறகு 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சி மேற்கொண்ட அஜித் கார் ரேஸ் பயிற்சியின் போது அவரது கார் விபத்துக்குள்ளானது
துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.
இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் வி`பத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் 21 ஆம் தேதி முதல் இன்று 23 ஆம் தேதி வரையில் இத்தாலியில் நடைபெற்ற 12 ஹவர்ஸ் ஆஃப் முகெல்லா கார் ரேஸில் அஜித் அணி கலந்து கொண்டது. இதில் 3ஆவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
வெற்றிக்கு பிறகு அஜித் தனது அணி வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார். விடாமுயற்சி படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லீ படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி சோலோவாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.