அவர்களும் சம்பந்தப்பட்ட படத்தை பற்றி ஒருவார்த்தை கூட பேசாமல், அவர்களின் பழைய கதைகளை பேசி நேரத்தை வீணடிக்கிறார்கள். அதிலும் சுவாரஸ்யம் என்கிற பெயரில் தேவையில்லாத கேலி கிண்டல்களும், ஆபாச பேச்சுக்களும் சரளமாக வருகிறது. தற்போது புதிதாக இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்கள் என்று ஒரு கும்பல், சுவாரஸ்யமே இல்லாத படங்களைக் கூட சூப்பராக இருக்கிறது என்று கிளப்பிவிடுகிறது. நிருபர்களுக்கு முன்னதாகவே அவர்களுக்கு படம் போட்டுக் காட்டுகின்றனர். காரணம், சினிமா நிருபர்கள் படத்தை பார்த்தால் படம் பற்றிய உண்மையான விமர்சனங்களைக் கூறிவிடுவர். ஆனால் இன்ப்ளூயன்சர்கள் 'கவனிப்பு'க்கு ஏற்றபடி படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி தள்ளிவிடுகின்றனர்.