அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

Published : Mar 23, 2025, 12:58 PM ISTUpdated : Mar 23, 2025, 01:02 PM IST

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் நடிக்க உள்ள அல்லு அர்ஜுன் அப்படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
14
அட்லீ படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - எவ்வளவு தெரியுமா?

Allu Arjun Salary : புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தினை சுமார் 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார்களாம். இந்நிலையில் அட்லீ இயக்கும் படத்திற்காக அல்லு அர்ஜுன் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

24
Allu Arjun Salary

அதன்படி அல்லு அர்ஜுன் அப்படத்திற்காக ரூ. 175 கோடி சம்பளமாக வாங்க உள்ளாராம். அதுமட்டுமின்றி படத்தின் மூலம் வரும் வருவாயில் 15 சதவீதம் பங்குகளும் தனக்கு தர வேண்டும் என ஒப்பந்தம் போட்டுள்ளதாக பிங்க்வில்லா தகவல் வெளியிட்டுள்ளது. பொதுவாக நடிகர்கள் சம்பளம் அதிகம் வாங்குவார்கள் அல்லது லாபத்தில் மட்டும் பங்கு கேட்பார்கள். ஆனால் அல்லு அர்ஜுன் இரண்டையுமே ஒரே படத்தில் வாங்க இருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்.

இதையும் படியுங்கள்... பாலிவுட் பாட்ஷாவை புரட்டி எடுக்கப்போகும் புஷ்பா! ஷாருக் கானுக்கு வில்லனாகும் அல்லு அர்ஜுன்?

34
Allu Arjun Next Movie

இந்தியாவிலேயே இது ஒரு சாதனையாகவும் கருதப்படுகிறது. பிரபாஸ், ரஜினி, ஷாருக்கான் போன்ற பெரிய ஹீரோக்களை விட அல்லு அர்ஜுன் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளார். இந்த பணத்தில் ஒரு பான் இந்திய திரைப்படத்தையே எடுக்கலாம். அட்லீயின் அசத்தலான திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளதாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் இது அல்லு அர்ஜுனின் கெரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

44
Allu Arjun Movie Line Up

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 1 மற்றூம் 2ம் பாகன் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அல்லு அர்ஜுன் கைவசம் சந்தீப் ரெட்டி வங்கா, வேணு ஸ்ரீராம், கொரட்டலா சிவா ஆகியோரின் படங்கள் உள்ளன. அல்லு அர்ஜுன், அட்லீயுடன் இணைந்து படம் நடிக்கிறார் என்று பலர் கூறினாலும் இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர். வருகிற ஏப்ரல் மாதம் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... அட்லீ கேட்ட டூமச் பட்ஜெட்; ஆளவிடுங்கடா சாமினு தலைதெறிக்க ஓடிய சன் பிக்சர்ஸ்?

Read more Photos on
click me!

Recommended Stories