ரோபோ சங்கர் பேரனுடன் கொஞ்சி விளையாடி; அழகிய தமிழ் பெயர் சூட்டிய கமல்ஹாசன்!
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டி இருக்கிறார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு கமல்ஹாசன் பெயர் சூட்டி இருக்கிறார்.
Indraja Robo Shankar's son Name : விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர். மதுரையை சேர்ந்த இவருக்கு கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் தான் பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தன. சின்னத்திரையில் பாப்புலராக இருந்த ரோபோ சங்கரை வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகப்படுத்தினார் தனுஷ். அவரின் மாரி படத்தின் மூலம், கோலிவுட்டில் காமெடியனாக அறிமுகமான ரோபோ சங்கர், பின்னர் அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்கிற மகள் உண்டு, அவரும் சினிமாவில் நடித்துள்ளார். அட்லீ இயக்கிய விஜய்யின் பிகில் படத்தில் சிங்கப் பெண்ணாக நடித்திருந்தார் இந்திரஜா. அப்படத்தில் இவர் நடித்த காமெடி ரோல் ஹிட் ஆனதை அடுத்து, விருமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்திரஜா. சினிமாவில் கோவை சரளா போல் ஒரு காமெடி நடிகையாக ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திரஜா, கடந்த ஆண்டு திடீரென திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... Indraja Shankar: கணவர் குழந்தையோடு சென்று பட்டம் வாங்கிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!
அவர் தன்னுடைய மாமா கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த ஜோடி திருமணமாகி ஓரண்டுக்குள்ளேயே குழந்தையையும் பெற்றெடுத்தது. இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தன்னுடைய குழந்தைக்கு பெயர் சூட்டி இருக்கும் தகவலை அறிவித்துள்ளார் இந்திரஜா. ரோபோ சங்கர், கமல்ஹாசனின் தீவிர ரசிகன் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால் அவர் கையாலேயே தன் பேரனுக்கு பெயர் சூட்ட விரும்பிய ரோபோ சங்கர், இன்று கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது இந்திரஜாவின் குழந்தையோடு கொஞ்சி விளையாடிய கமல்ஹாசன், அந்த குழந்தைக்கு நட்சத்திரன் என்கிற அழகிய தமிழ் பெயரை சூட்டி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு; தாத்தா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரோபோ ஷங்கர்!