வட போச்சே; பேபி ஜானுக்காக கீர்த்தி சுரேஷ் நிராகரித்த 700 கோடி வசூல் படம்; எது தெரியுமா?
நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரித்த பேபி ஜான் படத்தில் நடிப்பதற்காக, பிரம்மாண்ட பட வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
நடிகை கீர்த்தி சுரேஷ், அட்லீ தயாரித்த பேபி ஜான் படத்தில் நடிப்பதற்காக, பிரம்மாண்ட பட வாய்ப்பை நழுவவிட்டுள்ளார். அது என்ன படம் என்பதை பார்க்கலாம்.
Keerthy Suresh Rejects this 700 Crore Box Office Hit Movie : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பான் இந்தியா நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அட்லீ தயாரிப்பில் பாலிவுட்டில் உருவான பேபி ஜான் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். இது தமிழில் விஜய் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
பாலிவுட்டில் அறிமுகமான முதல் படமே தோல்வியை தழுவினாலும் கீர்த்தி சுரேஷுக்கு அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. தற்போது இந்தியில் அக்கா என்கிற வெப் தொடரில் நடித்து முடித்துள்ள கீர்த்து, அடுத்ததாக ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அப்படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் சீக்ரெட்டாக வைக்கப்பட்டு உள்ளது. இது ஒரு புறம் இருக்க, நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட்டில் கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு ஒன்றை நழுவ விட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷ் ரகசியமா பொத்தி பொத்தி பாதுகாத்த விஷயம் லீக் ஆகிடுச்சு; விரைவில் வரும் குட் நியூஸ்!
அதன்படி இந்தியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் சாவா. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முதன்முதலில் படக்குழு அணுகியது கீர்த்தி சுரேஷை தானாம். ஆனால் அவர் அந்த நேரத்தில் பேபி ஜான் பட வாய்ப்பு வந்ததால் அதற்கு ஓகே சொல்லிவிட்டு சாவா படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன்பின்னரே படக்குழு ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் ரிசல்ட் தலைகீழாகிப்போனது. கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்த பேபி ஜான் அட்டர் பிளாப் ஆனது. அவர் ரிஜெக்ட் செய்த சாவா 700 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கீர்த்தி சுரேஷ் இதுபோன்ற பிரம்மாண்ட வாய்ப்பை நிராகரித்தது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷாவுக்கு முன்னதாக கீர்த்தி சுரேஷை தான் அணுகினார்கள். ஆனால் அந்த சமயத்தில் ரஜினியின் தங்கையாக அண்ணாத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால், பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை நிராகரித்தார் கீர்த்தி சுரேஷ். அப்போதும் அவரின் முடிவு தவறாகி போனது. ஏனெனில் அண்ணாத்த பிளாப் ஆகி, பொன்னியின் செல்வன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு பின் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய கீர்த்தி சுரேஷ்!