திரிஷா முதல் பிக்பாஸ் ஸ்டார்ஸ் வரை; CSK மேட்ச் பார்க்க படையெடுத்து வந்த பிரபலங்கள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை காண ஏராளமான பிரபலங்களும் வந்திருந்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையேயான ஐபிஎல் போட்டியை காண ஏராளமான பிரபலங்களும் வந்திருந்தனர்.
Celebrities at CSK vs MI IPL Match : ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ந் தேதி கோலாகலமாக ஆரம்பமானது. இந்த தொடரின் 3வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் சென்னையில் நடக்கும் முதல் லீக் மேட்ச் இது என்பதால் இந்த போட்டி அனிருத் இசைக் கச்சேரி உடன் ஆரம்பமானது. சுமார் 20 நிமிடம் அவர் பாடிய பாடல்கள் டிவியில் ஒளிபரப்பப்படவில்லை. ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்கள் மட்டும் அதை கண்டுகளித்தனர்.
இதையடுத்து டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய மும்பை அணி, சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு திரிபாதி ஏமாற்றினாலும் பின்னர் வந்த கேப்டன் ருத்துராஜ், ரச்சின் ரவீந்திரா உடன் சேர்ந்து அதிரடியாக ஆடி அரைசதம் விளாசினார்.
இதையும் படியுங்கள்... 'தல' தோனி தரிசனம் பார்த்த 30.5 கோடி பேர்! ரசிகர்களால் குலுங்கிய சேப்பாக்கம் மைதானம்!
இலக்கை சென்னை அணி ஈஸியாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்ததால், ஆட்டம் பரபரப்பானது. இருப்பினும் கடைசி ஓவரில் சிக்சர் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார் ரச்சின் ரவீந்திரா. இதன்மூலம் சென்ன அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி விளையாடினாலே சேப்பாக்கம் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.
அதேபோல் நேற்றைய போட்டியை காண ரசிகர்கள் படையெடுத்து வந்ததால் சேப்பாக்கம் ஹவுஸ் புல் ஆனது. இந்த போட்டியை காண பிரபலங்கள் சிலரும் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் நடிகை திரிஷா தன்னுடைய தோழிகளான அர்ச்சனா கல்பாத்தி உள்பட சிலருடன் வந்து போட்டியை கண்டுகளித்தார். அதேபோல் பிக் பாஸ் பிரபலங்களான விஷ்ணு விஜய், செளந்தர்யா, ரவீனா, யாஷிகா ஆனந்த் ஆகியோருடன் விஜே மணிமேகலை, ஹுசைன் ஜோடியும் வந்து சிஎஸ்கே போட்டியை கண்டுகளித்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சொந்த மண்ணில் மும்பையை ஓட விட்டது எப்படி? சிஎஸ்கே வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!