ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் நயன். இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார். ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. தமிழ் நடிகர்கள் அதிகம் நடித்துள்ளதால் இப்படத்திற்கு தமிழ்நாட்டிலும் அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், ஜவான் பட முன்னோட்டத்தை பார்த்து டுவிட்டரில் பாராட்டி இருந்த விக்னேஷ் சிவனுக்கு ரிப்ளை செய்திருந்த ஷாருக்கான், உங்கள் அன்பிற்கு நன்றி விக்கி. நயன்தாரா அருமையானவர். இதை உங்க கிட்ட சொல்றேன் பாருங்க... உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் உஷாரா இருந்துக்கோங்க நயன்தாரா நன்கு உதைக்கவும், குத்தவும் கற்றுக்கொண்டார் என நகைச்சுவையோடு பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து விக்னேஷ் சிவன் போட்டுள்ள டுவிட்டில், “ஆமா சார் உஷாரா இருக்கணும். அதேபோல் ஜவான் படத்தில் உங்களுக்கு நயனுக்கும் இடையே சில நல்ல ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ரொமான்ஸ் கிங்கிடம் இருந்து அதையும் அவர் கற்றிருக்கிறார் என நினைக்கிறேன். உங்கள் படம் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... எக்ஸைட்மெண்டான விக்னேஷ் சிவன்... தல தோனியிடம் டீ ஷிர்டில் வாங்கிய ஆட்டோகிராப்! வைரலாகும் வீடியோ!