அப்பாவின் பெயர் சொல்லும் மகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன்.. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பாடகியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர். ஹே ராம், என் மனவானில், 7 ஆம் அறிவு உள்ளிட்ட ஏராளமான படங்களில் 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
பின்னர் இவரின் கவனம் நடிப்பின் மீது சென்றது. பாலிவுட் திரையுலகில் 2009 ஆம் ஆண்டு வெளியான 'லக்' என்கிற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் சித்தார்த்துடன் ஒரு படத்தில் நடித்த நிலையில், 7 ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமானார்.
திரையுலகை பொறுத்தவரை ஸ்ருதி ஹாசன் மிகவும் போல்டானா பெண்ணாகவே பார்க்க படுகிறது. எப்போதுமே தன்னை பற்றி பின்னால் பேசுபவர்கள் பற்றியும், தன்னுடைய பர்சனல் வாழ்க்கை தோண்டுபவர்கள் பற்றியும் கண்டு கொள்ளாமல் தனக்கு பிடித்த வாழ்க்கையை, பிடித்தவர்களுடன் வாழ்ந்து வருகிறார்.