அழகுக் குட்டி செல்லத்துடன் முதன்முறையாக ரித்திகா நடத்திய க்யூட் போட்டோஷூட்!

First Published | Nov 6, 2024, 12:17 PM IST

விஜய் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரித்திகா தமிழ் செல்வி தன்னுடைய மகளுடன் முதன்முறையாக நடத்தியுள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Rithika Tamilselvi

பிரவீன் பென்னட் இயக்கத்தில் வெளியாகி விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் வினோதினி என்கிற கேரக்டரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. அந்த சீரியலின் வெற்றிக்கு பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரித்திகா. அந்த சீரியலில் அம்ரிதா என்கிற கேரக்டரில் நடித்து வந்தார். 

Rithika Tamilselvi Baby

அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் யாருக்கு ஜோடியாக நடித்தார் தெரியுமா... தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கி வரும் விஜே விஷாலுக்கு ஜோடியாக தான் அம்ரிதா நடித்து வந்தார். அந்த சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு வந்தது. அதை ஏற்று அந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்தார் ரித்திகா.

இதையும் படியுங்கள்... சீரியல் நடிகை ரித்திகாவுக்கு வளைகாப்பு... படையெடுத்து வந்து வாழ்த்திய விஜய் டிவி பிரபலங்கள்

Tap to resize

Rithika Tamilselvi Baby Photos

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னுடைய சமையல் திறமையை நிரூபித்து இறுதிப்போட்டி வரை அவர் முன்னேறினார். இதையடுத்து ஒரு கட்டத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்தும் விலகிய ரித்திகா கடந்த 2022-ம் ஆண்டு வினு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவிலில் எளிமையாக நடைபெற்றாலும் சென்னையில் பிரம்மாண்டமாக ரிஷப்சன் நடத்தி அதில் ஏராளமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Rithika Tamilselvi Photoshoot with her New Born Baby

இதையடுத்து கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்ட ரித்திகாவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 10ந் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தை பிறந்தபின் அதை வெளியுலகத்துக்கு காட்டாமலேயே வளர்த்து வந்த ரித்திகா தற்போது முதன்முறையாக அக்குழந்தையுடன் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதில் ரித்திகாவின் கணவரும் இடம்பெற்று இருக்கிறார். தன் அழகுக் குட்டி செல்லத்தை கையில் ஏந்தியபடி அளவில்லா புன்னகையோடு ரித்திகா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்

Latest Videos

click me!