பாலகிருஷ்ணா முன் சூர்யா மானத்தை வாங்கிய கார்த்தி; ஜோதிகா பற்றிய சீக்ரெட்டை தம்பியிடம் சொல்வாரா?

First Published | Nov 6, 2024, 10:47 AM IST

சூர்யா பாலகிருஷ்ணா நடத்தும் நிகழ்ச்சியில், 'கங்குவா' பட புரமோஷனுக்காக கலந்து கொண்ட நிலையில், பாலகிருஷ்ணா முன்பே, அண்ணன் என்று கூட பார்க்காமல் சூர்யா மானத்தை வாங்கியுள்ளார் கார்த்தி. இதுகுறித்த தகவலை பார்ப்போம்.
 

photo credit-aha unstoppable 4

நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவருக்குமே, தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சூர்யாவை விட கார்த்தியைத் தான் தெலுங்கு ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகிறார்கள். தெலுங்கு நடிகராகவே அவரை பார்க்கிறார்கள். அதனால் அவரின் படங்களுக்கு டோலிவுட் ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். 

இந்நிலையில், நடிகர் சூர்யா அவரது வரவிருக்கும் 'கங்குவா' படத்தின் புரமோஷனுக்காக பட விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க சமீபத்தில் ஹைதராபாத் வந்தார். அப்போது பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பபிள் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

photo credit-aha unstoppable 4

கோலிவுட் சிங்கமும், டோலிவுட் சிம்மமும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என நாம் சொல்லவா வேண்டும். ஆமாம் இந்த நிகழ்ச்சி உண்மையில் வேறு லெவலில் இருந்தது. இவர்கள் இருவரும் பேசி கொண்ட ஒவ்வொரு விஷயங்களும்  ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 

இந்த நிகழ்ச்சியின் புரோமோ சமீபத்தில் வெளியான நிலையில், இதில் சூர்யாவை பாலகிருஷ்ணா நகைச்சுவையாக கிண்டல் செய்தார். வந்ததுமே ரணகளமா என சூர்யாவுக்கு தோன்றும் விதத்தில், நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே சீட்டில் அமரும் விஷயத்தில் பாலகிருஷ்ணா காமெடி செய்தார். 

முகுந்த் வரதராஜன் சாதியை படத்தில் காண்பிக்காதது ஏன்? 'அமரன்' இயக்குனர் விளக்கம்..!
 

Tap to resize

photo credit-aha unstoppable 4

சூர்யா சிரித்து கொண்டே சார்... என சொன்னதும், பாலகிருஷ்ணாவும் காமெடியாக பேசி சூர்யாவை கலாய்த்தார். பின்னர் சூர்யாவிடம், "உங்கள் தம்பி கார்த்தி உங்கள் தொலைபேசி எண்ணை எப்படிச் சேமித்து வைத்திருப்பார்?  என்று பாலகிருஷ்ணா கேட்க, முதல் கேள்வியே பாடத்திட்டத்திற்கு வெளியேவா  என்று சூர்யா கேட்டார்.
 

photo credit-aha unstoppable 4

பின்னர், உங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடைசிச் சண்டை எந்த விஷயத்தில் என்று பாலகிருஷ்ணா கேட்க, உண்மை சொல்லவா, பொய் சொல்லவா? என்று சூர்யா பதிலளித்தார். இதற்குப் பாலகிருஷ்ணா சீரியஸாக எழுந்து வந்து சூர்யாவை உற்றுப் பார்த்தார். இதற்குச் சூர்யா பதிலளிக்க, இறுதியில் நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறியது சிறப்பம்சமாக அமைந்தது. இதனால் சூர்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டார். 

பிக்பாஸ் விக்ரமன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள ப்ரீத்தி யார் தெரியுமா?
 

photo credit-aha unstoppable 4

அதன்பிறகு உங்கள் முதல் காதல் பற்றி சொல்லுங்கள் என பாலகிருஷ்ணா கேள்வி எழுப்பியதும் , அதிர்ச்சியில் சூர்யா முகத்தைத் திருப்பிக் கொண்டார். சார் வேண்டாம் சார் , பிரச்சனையா ஆகிடும், வீட்டுக்குப் போக வேண்டும் என்று கூறியது வேற லெவல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

அதன்பிறகு கார்த்திக்கு போன் செய்தார் பாலகிருஷ்ணா. இப்போது உங்கள் அண்ணன் நிறையப் பொய்கள் சொன்னார் என்று பாலகிருஷ்ணா கூற, சார் அவர் சிறுவயதிலிருந்தே அப்படித்தான் என்று கார்த்தி கூறியதும் சூர்யாவின் மானம் போனது. 
 

மேலும், சூர்யாவை பற்றி சில கேள்விகளை கார்த்தியிடம் சூர்யா கேட்க அவரும் தனக்கு தெரிந்த பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.  ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான சூர்யா, நீ கத்தி, கார்த்தி அல்ல என்று கூறியதும் பாலகிருஷ்ணா சிரித்தார். 

உங்களை பற்றிய சில ரகசியங்களை யாரிடம் பகிர்ந்து கொள்வீர்கள்? கார்த்தியிடமா, ஜோதிகாவிடமா என்று பாலகிருஷ்ணா கேட்டு விட்டு, சூர்யாவின் இதயத்தைப் பரிசோதித்தார். என் இதயம் 240 முறை துடிக்கிறது சார் என்று சூர்யா கூற, அதென்ன ஜோதிகா ஜோதிகா என்று துடிகிறது என்று பாலகிருஷ்ணா கேட்டார். கார்த்தியைப் பற்றிய விஷயங்களை ஜோதிகாவிடமும், ஜோதிகாவின் ரகசியங்களை... கூறுவீர்களா என்று கூறி சஸ்பென்ஸில் விட்டார். இதனால் மனைவி ஜோதிகாவின் ரகசியங்களை கார்த்தியிடம் சூர்யா பகிர்ந்து கொள்வாரா? என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு எழுந்தது. 

எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?

photo credit-aha unstoppable 4

அதன்பிறகு ஜோதிகா பற்றி உருக்கமாக பேசிய சூர்யா... அவர் இல்லாமல் என் வாழ்க்கையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்று கூறி மேடையிலேயே தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார் சூர்யா. 

பின்னர் நகைச்சுவையாகச் சென்ற நிகழ்ச்சி திடீரென உணர்ச்சிப்பூர்வமாக மாறியது. சிறு குழந்தைகள் தங்கள் உடல்நலக் குறைபாடுகளைப் பற்றிக் கூறியபோது சூர்யா கண்ணீர் விட்டார். தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல ஆதரவற்ற குழந்தைகளைப் படிக்க வைப்பது, உள்ளிட்ட சில நெகிழ்ச்சியான விஷயங்களை சூர்யா பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!