அடங்காத அசுரன் தனுஷின் ராயன் பட லைஃப் டைம் வசூலை 6 நாட்களில் அடிச்சு தூக்கிய அமரன்!

Published : Nov 06, 2024, 09:40 AM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த அமரன் திரைப்படம் ராயன் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

PREV
14
அடங்காத அசுரன் தனுஷின் ராயன் பட லைஃப் டைம் வசூலை 6 நாட்களில் அடிச்சு தூக்கிய அமரன்!
Raayan, Amaran

அமரன் படம் தான் தற்போது தமிழ்நாட்டின் டாக் ஆஃப் தி டவுன் ஆக உள்ளது. இந்த படத்தை பார்த்து பாராட்டாத ஆளே இல்லை என சொல்லும் அளவுக்கு இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அமரன் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவை சேர்ந்த உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சூர்யா, சிம்பு என பல நடிகர்கள் படத்தை பார்த்து தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

24
sivakarthikeyan, Sai Pallavi

அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய படம் அமரன் தான். இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே உலகளவில் ரூ.42 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இதையடுத்து ரஜினி, விஜய்க்கு அடுத்தபடியாக அதிவேகமாக 100 கோடி வசூலை எட்டிய ஹீரோவாக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் 100 கோடி வசூல் ஈட்டியது.

இதையும் படியுங்கள்... முகுந்த் வரதராஜன் சாதியை படத்தில் காண்பிக்காதது ஏன்? 'அமரன்' இயக்குனர் விளக்கம்..!

34
Amaran Movie Box Office Collection

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் அமரன் மாறி உள்ளது. இதுவரை அவரது கெரியர் பெஸ்ட் படமாக டான் இருந்து வந்த நிலையில், அதன் வசூல் சாதனையை அமரன் படம் நான்கே நாட்களில் முறியடித்தது. டான் திரைப்படம் 125 கோடி வசூலித்திருந்தது. இப்படி பாக்ஸ் ஆபிஸில் சாதனை மேல் சாதனை படைத்து வரும் அமரன் திரைப்படம் தற்போது தனுஷ் நடித்த ராயன் படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது.

44
Raayan Movie LifeTime Box Office Collection

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் ராயன். கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.156 கோடி வசூலித்து இருந்தது. இந்த வசூலை ஆறே நாட்களில் முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது அமரன். அதுமட்டுமின்றி இன்னும் சில தினங்களில் அமரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடி என்கிற இமாலய வசூலையும் அசால்டாக எட்டிப்பிடிக்கும் என கூறப்படுகிறது. இதன்மூலம் கோலிவுட்டின் அடுத்த பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இதையும் படியுங்கள்... அமரன் மெகா ஹிட் ஆகிடுச்சு; அப்போ அடுத்து? "Powerful" நடிகருடன் கைகோர்க்கும் ராஜ்குமார்! யார் அவர்?

click me!

Recommended Stories