நயன்தாரா உடன் லிப்லாக் காட்சியா? புது குண்டை தூக்கிப்போட்ட கவின்!

First Published | Nov 6, 2024, 7:49 AM IST

நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாக ஹாய் என்கிற படத்தில் நடித்து வரும் நடிகர் கவின், லிப்லாக் காட்சி பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார்.

Kavin, Nayanthara

தமிழ் திரையுலகில் இளம் ஹீரோவாக வளர்ந்து வருபவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் ஒட்டுமொத்தமாக மாறிய கவினின் மார்க்கெட் தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அவரின் கதை தேர்வும், அவரது யதார்த்த நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவின் நடிப்பில் கடந்த வாரம் ப்ளடி பெக்கர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரித்து இருந்தார். இப்படத்தை சிவபாலன் என்பவர் இயக்கி இருந்தார்.

Kavin

ப்ளடி பெக்கர் படத்தின் புரமோஷனுக்காக டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார் கவின். அதில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு கவினும் ஓப்பனாக பதிலளித்தார். அதில் முதல் கேள்வியாக, உங்களுக்கு எந்த ஹீரோயின் மீது அதிக கிரஷ் இருக்கிறது என கேட்கப்பட்டது. அதற்கு ஷ்ரத்தா கபூர் என பதிலளித்தார் கவின். பின்னர் தமிழ் ஹீரோயின் யார் என கேட்கப்பட்டதற்கு, நடிகை திரிஷா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறினார் கவின்.

இதையும் படியுங்கள்... நெல்சனின் கஜானாவை காலி செய்தாரா கவின்? ப்ளடி பெக்கர் வசூல் நிலவரம் இதோ

Tap to resize

Kavin about LipLock

அடுத்ததாக உங்களைப்பற்றி வந்த மோசமான வதந்தி என்ன என்கிற கேள்விக்கு, நான் ஈசிஆரில் பங்களா கட்டிட்டு இருக்கேன்னு வந்துச்சு, அது உண்மையாக இருந்தால் எனக்கு சந்தோஷம் ஆனா அது உண்மை இல்லை வெறும் வதந்தி தான் என கூறினார். மூன்றாவது கேள்வியாக ஒரு ஹீரோயினுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் அது யாருடன் நடிக்க ஆசைப்படுவீர்கள் என்கிற வில்லங்கமான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு கவின் அளித்த பதில் தான் ஹைலைட்.

Kavin Next Movie With Nayanthara

லிப்லாக் பற்றி கவின் கூறுகையில், எந்த ஹீரோயின் என இல்லை; கதைக்கு தேவைப்பட்டால் நடிக்க தயாராக இருக்கிறேன். நம்ம எப்பவுமே கன்டெண்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம், மத்ததெல்லாம் நெக்ஸ்ட் தான் என கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் கதைக்கு தேவைப்படால் எந்த ஹீரோயினுடன் இருந்தாலும் லிப்லாக் காட்சியில் நடிப்பேன் என கவின் கூறியுள்ளதால், ஒரு வேளை அடுத்ததாக நயன்தாரா உடன் நடிக்கும் படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்திருப்பாரோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8; 25வது நாளை கவினுடன் கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள் - Viral Video!

Latest Videos

click me!