விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒரு தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கி பின்னர் இ எம் ஐ, விண்ணைத்தாண்டி வருவாயா, போன்ற சீரியல்களில் நடித்த விக்ரமன்... மெல்ல மெல்ல அரசியலிலும் ஆர்வம் காட்ட துவங்கினார்.
இளம் வயதிலேயே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த விக்ரமன், அதிரடியாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். போட்டியாளர்கள் மத்தியில் மட்டும் இன்றி, மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்த விக்ரமன், பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடி பைனல் வரை வந்தார்.