அமரன் மெகா ஹிட் ஆகிடுச்சு; அப்போ அடுத்து? "Powerful" நடிகருடன் கைகோர்க்கும் ராஜ்குமார்! யார் அவர்?

Rajkumar Periyasamy : அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விரைவில் சூப்பர் ஹிட் தமிழ் நடிகரோடு ஒரு திரைப்படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

Rajkumar Periasamy

கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "ரங்கூன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் மக்கள் மத்தியில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ராஜ்குமார் பெரியசாமி. இந்த சூழலில் சுமார் 7 ஆண்டுகள் கழித்து அவருடைய இயக்கத்தில் உருவாகி இப்போது பட்டி ரொட்டி எங்கும் மெகா ஹிட் ஆகி வருகிறது பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படம். இந்த திரைப்படத்தின் தலைப்பு ஏற்கனவே பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் தலைப்பு என்பதால், அந்த விஷயத்திலும் கௌதம் கார்த்திக் தான் ராஜ்குமார் பெரியசாமிக்கு பெரிய அளவில் உதவிகளை செய்துள்ளதாகவும் அவரே பல மேடைகளில் கூறியுள்ளார்.

நடிப்பு மட்டுமல்ல; பாட்டிலும் நான் குயின் - ஆச்சி மனோரமா பாடி மெகா ஹிட்டான டாப் 10 ஹிட் சாங்ஸ்!

Amaran

அமரன் திரைப்படம் தீபாவளி திருநாளுக்கு வெளியான நிலையில், உலக அளவில் இப்போது 200 கோடி ரூபாயை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் 100 கோடி ரூபாயை கடந்து வசூல் செய்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் அதிக வசூல் செய்ய உள்ள திரைப்படமாகவும் இது மாறி இருக்கிறது. மறைந்த ராணுவ வீரர் முகுந்தன் அவர்களுடைய கதையைத்தான் இந்த திரைப்படத்தில் ராஜ்குமார் பெரியசாமி எடுத்திருக்கிறார்.


Sai Pallavi

பிரபல நடிகை சாய் பல்லவி நடித்த இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. தீபாவளி திருநாளுக்கு "அமரன்", "ப்ளடி பெக்கர்",  "பிரதர்" மற்றும் "லக்கி பாஸ்கர்" ஆகிய திரைப்படங்கள் வெளியான நிலையில், வசூல் ரீதியாக சிவகார்த்திகேயனின் "அமரன்" திரைப்படம் தான் பெரிய அளவில் சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமரன் திரைப்பட வெற்றியை தொடர்ந்து விரைவில் ஒரு முக்கிய நடிகரோடு தான் இணையுள்ளதாக தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் ராஜ்குமார்.

Dhanush

அண்மையில் அவர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது, அமரன் திரைப்படம் வெற்றி தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும், அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் பவர்ஃபுல் நடிகர் ஒருவரோடு தற்பொழுது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், இது பல வருடங்களாகவே நடந்து வரும் பேச்சுவார்த்தை என்றும் கூறியுள்ளார். அமரன் திரைப்படம் இப்பொழுது முடிந்துள்ள நிலையில் அடுத்தபடியாக தான் கையில் எடுக்க உள்ளது அந்த திரைப்படம் தான் என்றும் கூறியிருக்கிறார் ராஜ்குமார் பெரியசாமி. ஏற்கனவே அவர் நடிகர் தனுஷுக்கு ஒரு கதையை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகையால் பிரபல நடிகர் தனுஷ் உடன் தான் தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இணை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?

Latest Videos

click me!