நடிப்பு மட்டுமல்ல; பாட்டிலும் நான் குயின் - ஆச்சி மனோரமா பாடி மெகா ஹிட்டான டாப் 10 ஹிட் சாங்ஸ்!

Actress Manorama : நான்கு தலைமுறை நடிகர்களோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களிலும், 5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து அசத்தியவர் தான் மனோரமா.

Manorama

தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர், நடிகைகளின் இடங்களை நிரப்ப தொடர்ச்சியாக நடிகர், நடிகைகள் வந்து கொண்டே தான் இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக ஒரு நடிகையின் இடத்தை நிரப்ப யாருமே இல்லை என்று கூறினால், அது மூத்த நடிகை மறைந்த ஆச்சி மனோரமாவின் இடம் தான் என்றால் அது மிகையல்ல. ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா, கடந்த 1958ம் ஆண்டு வெளியான "அன்பு எங்கே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். 2017ம் ஆண்டு அவர் இறக்கும் முன் 2013ம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடித்திருந்தார். 

மூன்றே மணிநேரம்; 3 படங்களுக்கு 21 டியூன் போட்டு மிரட்டிய இளையராஜா - என்னென்ன படங்கள் தெரியுமா?

Veteran Actress Manorama

எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் தொடங்கி இன்று நடிகர் சூர்யா வரை கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களோடு அரை நூற்றாண்டு காலமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக அவர் பயணித்து வந்தார். ஆரம்ப காலத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே இவர் நாயகியாக நடித்திருக்கிறார் என்றாலும் கூட, நாகேஷ் மற்றும் மனோரமாவின் காம்பினேஷனில் உருவாகும் அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆனது. ஒரு கட்டத்தில் வருடத்திற்கு 20 முதல் 30 திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு மாபெரும் புகழோடு வளம் வந்தவர் மனோரமா. நடிப்பு மட்டுமல்லாமல் பாடுவதிலும் பெரிய அளவில் திறன் கொண்டவர் மனோரமா என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் அவருடைய குரலில் ஒலித்த டாப் 10 பாடல்களை இந்த பதிவில் காணலாம்.


Manorama Songs

1963ம் ஆண்டு விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் வெளியான "ரத்த திலகம்" என்கின்ற திரைப்படத்தில் நான் முதல் முதல் மனோரமாவின் குரலில் ஒரு பாடல் ஒலித்தது. "போகாதே போகாதே என் கணவா" என்கின்ற அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரிய அளவில் ஹிட்டானது. அதைத்தொடர்ந்து 1968ம் ஆண்டு வி. குமார் இசையில் பொம்மலாட்டம் என்கின்ற படத்தில் ஒலித்த "வா வாத்தியாரை ஊட்டாண்ட" என்கின்ற பாடல் மனோரமாவின் குரலில் ஒழித்த மெகா ஹிட் பாடல்களில் ஒன்று. 1979ம் ஆண்டு விஸ்வநாதன் இசையில் உருவான திரைப்படம் தான் "பூவா தலையா". இந்த திரைப்படத்தில் வந்த "போடச்சொன்னால் போட்டுக்கிறேன்.. போடும் வரை கன்னத்திலே" என்கின்ற பாடல் மனோரமா குரலில் உருவானது தான். 

Actress Manorama

1973 ஆம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் வெளியான "சூரியகாந்தி" என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த "தெரியாதோ நோக்கு தெரியாதோ" என்கின்ற பாடலும் பெரிய அளவில் பிரபலம். 1979 ஆம் ஆண்டு விஸ்வநாதன் இசையில் வெளியான குப்பத்து ராஜா என்கின்ற படத்தில் வந்த "கொடி கட்டி பறக்குதடா" என்கின்ற பாடல் மனோரமா குரலில் உருவான பாடல் தான். அபூர்வ சகோதரர்களில் "ராஜா கைய வச்சா", பாட்டி சொல்லை தட்டாதே திரைப்படத்தில் "டில்லிக்கு ராஜானாலும்", தங்கமான புருஷன் திரைப்படத்தில் வந்த "தாய்க்குலமே தாய்க்குலமே" என்கின்ற பாடல், மே மாதம் திரைப்படத்தில் வெளியான "மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்" என்கின்ற பாடல் என்று மனோரமா குரலில் ஒழித்த பல பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக மாறியது.

எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?

Latest Videos

click me!