எம்.ஜி.ஆரை முதல் முறையாக கண் கலங்கி அழ வைத்த கண்ணதாசன் பாடல்! எது தெரியுமா?

First Published | Nov 5, 2024, 5:31 PM IST

எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடலை, கேட்டு அழுத தகவல் குறித்து தற்போது வெளியாகி உள்ளது. அது எந்த பாடல் என்பதை பார்ப்போம்.
 

MGR Emotional

எம்ஜிஆர் தன்னுடைய படத்தின் கதையை தேர்வு செய்வதில் எந்த அளவுக்கு கவனமாக இருப்பாரோ, அதே அளவுக்கு தன்னுடைய திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
 

MG Ramachandran

எம்ஜிஆர் முன்னணி நடிகராக மாறி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் நடிகராக மாறிய பின்னர், காதல் பாடல்களை தவிர்த்து சில தத்துவ பாடல்களும் படங்களில் இருக்க வேண்டும் என விரும்புவார். அப்படி இவர் படத்தில் இடப்பெற்ற, நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, திருடாதே தம்பி திருடாதே, போன்ற ஏராளமான பாடல்கள் என்றென்றும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத பாடல்களாகும்.

சைலண்டாக நடந்து முடிந்த விக்ரமன் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்!

Tap to resize

Chief Minister MGR

எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பெரும்பாலான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன் தான். கண்ணதாசனுடன் ஏற்பட்ட மனக்கசப்புக்கு பின்னரே எம்ஜிஆர் நடிக்கும் படங்களுக்கு, பாடல் எழுதும் பொறுப்பு வாலிக்கு சென்றது. வாலி -  எம்ஜிஆர் காம்பினேஷனில் அரசியல் கருத்துக்களோடு வெளியான பல பாடல்கள் மக்கள் மனதை வென்ற பாடல்களாக உள்ளன. அதேபோல் அரசியலிலும் எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தும் பாடல்களாக அவை அமைந்தது.
 

MGR Crying This song

இந்நிலையில் எம்ஜிஆர் தன்னுடைய படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை கேட்டு மனம் உருகி அழுத சம்பவம் குறித்து உங்களுக்கு தெரியுமா?. எம்ஜிஆர் நடிப்பில், பி நீலகண்டன் இயக்கத்தில், 1972 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'சங்கே முழங்கு'. இந்த படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக லட்சுமி நடிக்க, பிஎஸ் ராகவன், எஸ் ஏ அசோகன், சோ ராமசாமி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கமலஹாசன் இந்த படத்தில் டான்ஸ் அசிஸ்டன்ட்டாக பணியாற்றினார்.

தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு? முதல் ஆளாக படத்தை பார்த்து விமர்சனம் கூறிய பிரபலம்!
 

Kavingar Kannadasan

இந்த படத்தில் கண்ணதாசன் வரிகளில் உருவான பாடல்.. (அந்த நாலு பேருக்கு நன்றி).

 "உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்லவோர் வார்த்தை இல்லை...  
நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை... 
என் தங்கமே அது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை....
 எவருக்கோ இறைவன் தந்தான்! அந்த நாலு பேருக்கு நன்றி என்கிற பாடல்.
 

TM Soundarrajan

கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.விஸ்வநாதன், இசையில் உருவான இந்த பாடலை டி எம் சௌந்தரராஜன் பாடி இருந்தார். இந்த பாடலை ரெக்கார்டிங் செய்து, எம்ஜிஆரிடம் போட்டு காட்டிய போது, அவர் தன்னை மறைந்து, கண் கலங்கி அழுததாக TMS தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மாதவன் வீட்டில் நடந்த விசேஷம்; திடீர் விசிட் அடித்த அஜித்! வைரலாகும் புகைப்படம்!
 

Latest Videos

click me!