வறுமையில் இருந்த வாலி; நாகேஷ் வாங்கி கொடுத்த பேப்பரால் லட்சாதிபதி ஆன கதை தெரியுமா?

First Published | Nov 5, 2024, 2:18 PM IST

தமிழ் திரையுலகில் காலம் கடந்து கொண்டாடப்படும் காவியக் கவிஞர் வாலியின் வாழ்க்கையை நாகேஷால் மாறிய கதையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Nagesh, Vaali

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கவிஞர் வாலியை சொல்லலாம். எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதி இருக்கிறார் வாலி. அந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு பல தத்துவ பாடல்களை எழுதிய பெருமையும் வாலியையே சேரும். இவருக்கு சினிமாவில் ஒரு வழிகாட்டியாக இருந்தது நடிகர் நாகேஷ் தான். அவர் கொடுத்த ஐடியா தான் வாலி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி இருக்கிறது. அது என்ன ஐடியா என்பதை பார்க்கலாம்.

Vaali

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்த வாலி, தன் நண்பன் நடிக்கும் தாமரைக்குளம் என்கிற படத்தின் படப்பிடிப்பை காண சென்றிருக்கிறார். அப்படத்தில் வாலியின் நண்பன் கோபி தான் ஹீரோவாம். அப்போது அப்படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகரான குண்டுராவை வாலியிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கோபி. அவர் ஒல்லியாக இருப்பதை பார்த்ததும், இந்த உடம்பை வச்சிட்டு சினிமாவில் நடிக்க வந்ததே தப்பி என நக்கலாக கூறி இருக்கிறார். இதற்கு குண்டுராவும் நீங்க எந்த தைரியத்தில் பாட்டெழுத வந்தீங்க என பதிலடி கொடுக்க இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்... சரியான நேரத்தில் பாட்டு எழுதி கொடுத்தும்... எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய வாலி! ஏன் தெரியுமா?

Tap to resize

Nagesh

இப்படி எதிரும் புதிருமாக இருந்த வாலியும் நாகேஷும் நாளடைவில் நெருங்கிய நண்பர்களாக மாறி இருக்கின்றனர். வாலியின் ஜிகிரி தோஸ்தாக இருந்த குண்டுராவ் வேறுயாருமில்லை நடிகர் நாகேஷ் தான். ஆரம்பத்தில் வறுமையில் இருந்த வாலியும் நாகேஷும் ஒன்றாக தங்கி இருந்தார்களாம். அப்போது தினசரி நாகேஷ் நடிக்க வாய்ப்பு தேடி சென்றாலும் வாலி சோம்பேறியாக வீட்டிலேயே இருப்பாராம். அப்போது நாகேஷுக்கு ஒரு ஐடியா தோன்றி இருக்கிறது.

Lyricist Vaali

அதன்படி கடைக்கு போய் 10 பேப்பரை வாங்கி வந்து, வாலியிடம் கொடுத்து சும்மாவே இருக்கும்போது உனக்கு மனதில் தோன்றுவதை எல்லாம் இதில் எழுதி வை... பின்னாளில் அதுவே உனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஐடியா கொடுத்திருக்கிறார் நாகேஷ். அதன்படி வாலி வறுமையில் இருந்தபோது எழுதிய பல பாடல்கள் பின்னாளில் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து கொடுத்துள்ளது. உதாரணத்திற்கு சக்கரம் படத்தில் இடம்பெறும் ‘காசேதான் கடவுளடா’, அன்புக்கரங்கள் படத்தில் இடம்பெற்ற ‘இறைவன் இல்லா ஆலயத்தில்’ போன்ற ஹிட் பாடல்கள் எல்லாம் அவர் அந்த சமயத்தில் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நாகேஷ் முதல் அப்புக்குட்டி வரை.. தேசிய விருது வென்ற டாப் 3 கோலிவுட் காமெடி நடிகர்கள்!

Latest Videos

click me!