சைலண்டாக நடந்து முடிந்த விக்ரமன் திருமணம்; படையெடுத்து வந்து வாழ்த்திய பிக்பாஸ் பிரபலங்கள்!

First Published | Nov 5, 2024, 1:55 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி முதல் ரன்னரப்பாக மாறிய விக்ரமனுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

Vikraman Radhakrishnan

நடிகர் மற்றும் அரசியல்வாதியாக அறியப்படும், விக்ரமன் ராதாகிருஷ்ணன்.. அரசியல் அவதாரம் எடுப்பதற்கு முன்பே, தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

Vikraman Starting Carrier Vijay tv

அந்த வகையில், கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதை தொடர்ந்து அதே ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான, 'EMI - தவணை முறை வாழ்க்கை' என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்

தனுஷின் 'இட்லி கடை' படம் எப்படி இருக்கு? முதல் ஆளாக படத்தை பார்த்து விமர்சனம் கூறிய பிரபலம்!

Tap to resize

Vinnai Thandi Varuvaya Serial

இதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'விண்ணை தாண்டி வருவாயா' என்கிற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ரொமான்டிக் ஹீரோவாக விக்ரமன் நடித்து வந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு கட்சி நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

Bigg boss Tamil season 6 Contestant

மேலும் 2020-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை விடுதலை சிறுத்தை கட்சியின் பேச்சாளராகவும் இருந்த விக்ரமனுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் பல கலவரங்கள் முட்டி மோதிய போதிலும் மிகவும் நிதானமாக தன்னுடைய ஒவ்வொரு முடிவையும் எடுத்து, கமல்ஹாசனிடம் பாராட்டை பெற்றார்.

மாதவன் வீட்டில் நடந்த விசேஷம்; திடீர் விசிட் அடித்த அஜித்! வைரலாகும் புகைப்படம்!

Vikraman Lost Title

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபைனல் வரை வந்த விக்ரமன்... மிக குறைந்த ஓட்டுகள் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை அஸீம்மிடம் பறிகொடுத்து, முதல் ரன்னரப்பாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது தோல்விக்கு காரணம், கடைசி நேரத்தில்... அரசியல் ரீதியாக இவரை வெற்றி பெற வைக்க 
முயற்சி செய்தது என்றே கூறப்பட்டது.

Vikraman Controversy

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடர்ந்து அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த விக்ரமன் மீது, கிருபா முனுசாமி என்பவர், விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி கமிஷ்னர் அலுவலகத்தில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலிக்கும் போது தன்னிடம் இருந்து ரூ.13.7 லட்சம் பணம் வாங்கியதாகவும், அதில் 12 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டு 1.7 லட்சத்தை தரவில்லை என்றும் கூறி இருந்தார்.

முதல் படத்திலேயே 1000 கோடி வசூல் அள்ளிய தமிழ் நடிகையா இது! யாரென்று தெரிகிறதா?

Kiruba Munusamy

கிருபா முனுசாமி, விக்ரமனுடன் நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் விக்ரமன் இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்த நிலையில், சட்ட ரீதியாக இந்த பிரச்னையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார். 

Vikraman Wedding

கிருபா முனுசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விக்ரமன் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. 

13 படங்கள்... இதுவரை தோல்வியே காணாத பிரபலம்; கிருஷ்ணர் வேடத்தில் இருப்பது யார் தெரியுமா?

Vikraman Wedding Photos Goes Viral

இப்படி பல சர்ச்சைகளில் இருந்து மீண்ட, விக்ரமனுக்கு சைலண்டாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் திருமணம் செய்து கொண்டுள்ள பெண் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில், இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை விக்ரமன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட அவரை வைரலாகி வருகிறது. அதே போல் பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் விசிக கட்சி தொண்டர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!