Coolie
வேட்டையன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் என மிகபெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Coolie Movie Rajinikanth
கூலி படம் தங்க கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் அதிகளவில் சண்டைக் காட்சியில் நடித்துள்ளதாகவும் இப்படம் லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்சுக்குள் வராது என்றும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க தனி கதையம்சம் கொண்ட படமாகவே கூலி உருவாகி வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால் தடைபட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... லோகேஷ், ரஜினிக்கு சொன்ன 2வது கதை தான் கூலி; முதல் கதை ட்ராப்பாக காரணம்? பிரபலம் தந்த தகவல்!
Coolie Movie Release Update
இந்நிலையில், கூலி படத்தின் ரிலீஸ் அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். அதன்படி இப்படத்தை வருகிற 2025-ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு விடுமுறையை டார்கெட் செய்து ரிலீசாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டும் உறுதியானால் கூலி படம் கன்பார்ம் 1000 கோடி வசூலை அள்ளிவிட வாய்ப்புகள் இருக்கிறது.
Lokesh kanagaraj, Rajinikanth
கூலி படத்தை முடித்த கையோடு தன்னுடைய எல்சியூ படங்களை கையில் எடுக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். அதன்படி முதலாவதாக கைது 2 படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடிக்க உள்ளார் லோகி. இப்படத்தை முடித்ததும் சூர்யாவை வைத்து ரோலெக்ஸ் என்கிற படத்தை எடுக்க உள்ளாராம். அதன்பின்னர் விக்ரம் 2 அல்லது லியோ 2 ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படத்தை எடுக்கும் முடிவில் உள்ளாராம் லோகி. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... கூலி நிலைமை என்ன? ஸ்ருதியின் அதிரடி செயலால் குழப்பத்தில் லோகேஷ் கனகராஜ்!